கீழ்சாதி ஹாரன் அடிப்பியா? மதுரையில் வெடித்த ஜாதி வன்முறை.. தலித் வீடுகள் சூறை -போலீஸ் மீதும் புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பைக்கில் ஹாரன் அடித்த காரணத்துக்காக தலித்துகள் மற்றும் அவர்களின் வீடுகள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து உள்ளது.

மதுரை மாவட்டம் செக்காணுரணியை அடுத்து உள்ளது கொ.புலியங்குளம் என்ற கிராமம். இங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் திருவிழாவுக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சாலையை மறித்து பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற பட்டியல் இளைஞர்கள் ஹாரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

4 arrested in Madurai for attacking Dalits and their houses due to caste

அப்போது உள்ளூர் ஆதிக்க சாதியினர் அமைதியாக வழிவிட முயன்று உள்ளனர். ஆனால் வெளியூர்களில் இருந்து வந்த ஆதிக்க சமூக இளைஞர்கள், சாதி பெயரை சொல்லி திட்டி இவர்களுக்கு எல்லாம் ஏன் மரியாதை கொடுக்கிறீர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களின் பகுதிக்கு கட்டைகளுடன் சென்று வீடுகளையும், பெண்களையும் தாக்கி தகராறில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளனர்.

தொடக்கத்தில் வழக்குப்பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய முற்றுகை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சி தாக்கல் வீடியோவுடன் நடந்த முழு விபரத்தையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, "சமூக விடுதலையை வெல்ல போராடுவதை தவிர இந்த எளிய சமூகத்திற்கு வேறு வழியில்லை.

கொடிய சாதிவெறி மிருகங்கள் வாழும் இப்பூமியில் அவர்களை விரட்டி அடிப்பதன் மூலமே நம்மை நாம் தற்காத்துக் கொள்ளமுடியும். நடுரோட்டில் நின்றவர்களை விலகச் சொல்வதற்காக ஒலி எழுப்பிய காரணத்திற்கு,"கீழ்சாதி. நீ எல்லாம் ஹார்ன் அடிச்சா நாங்க விலகணுமா?" என்று சொல்லி அந்த எளியவனை தாக்கியதுடன் கட்டை கம்புகளுடன் 20 க்கும் மேற்பட்டோர் சென்று வீடுகளை அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் இருந்த பெண்களை அடித்து காயப்படுத்தி தங்கள் சாதி திமிரை காட்டியுள்ளனர்.

அடிப்பட்ட காயத்துடன் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற அந்த எளிய மக்களை வாசலில் காக்க வைத்துவிட்டு மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல் நிலையத்தார் அடித்தவர்களின் உறவினர்கள் இல்லங்களில் சென்று கறி விருந்தில் சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக வந்து புகார் கொடுக்கச் சென்றவர்களையே பிடித்து வைத்தனர். கோகுல் அவர்கள் உள்ளே சென்று 'ஏன் புகார் கொடுக்க வந்தவர்களை பிடித்து வைத்துள்ளீர்கள் என்று கேட்க.. சார் வாங்க பேசிக்கலாம் சின்ன பங்க தவறு செய்துவிட்டார்கள் என்று கூலாக பதில் சொல்லி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டார் காவல் நிலைய உதவியாளர்.

புகார் மனுவை மாற்றித் தாருங்கள் என்று என்னிடம் கேட்க., இது என்ன போலீஸ் ஸ்டேசனா? இல்லை பஞ்சாயத்துசெய்யும் இடமா? வீடு இழந்து காயத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அண்ணன் காளிமுத்து, சேவுகரத்தினம், மதிவளவன், பிரவீன், இரணியன், அம்பேத்கர் உட்பட்ட 70 நபர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டோம். வீடியோ பதிவுகள், நேரடி சாட்சியங்கள் அனைத்தும் இருந்தும் 7 மணி நேர தாமதத்திற்கு பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு முறை எஸ்பியிடம் பிரச்சினையின் தீவிரத்தை சொல்லி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அண்ணன் காளிமுத்து,சேவுகரத்தினம், இரணியன் உட்பட விசிக நிர்வாகிகள் பங்கேற்றனர். போராடாமல் விடிவு கிட்டாது. ரோட்டில் ஒதுங்கிச் செல்லுங்கள் என்று சொன்னதற்கு இத்தகைய தாக்குதல். நவீன சமூகத்தில் வாழ்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+