மதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க
சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்
மதுரை: நான்கு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தை கிருமி நாசினி கொண்டு சுகாதாரப்பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி சென்ற சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட பத்து பேரை இரண்டு கட்டமாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இரண்டாம் கட்ட விசாரணையானது காவலர்கள் சாமதுரை, செல்லத்துரை, வெயில் முத்து ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கும் போது சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக விசாரணையை முடித்தனர்.
அந்த இரண்டு அதிகாரிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிபிஐ அலுவலகம் முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சிபிஐ அதிகாரிகள் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையிலும் கிருமி நாசினி கொண்டு தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications