உலகின் ஆபத்தான சாலையில் 10000 கி.மீ பயணம்! – காதுகேளாதவர் செய்த மாஸ் சாதனை.. இதுதான் தன்னம்பிக்கை
மதுரை: காது கேட்பதில் பிரச்சினை. கவலை கொள்ளவில்லை குங்கும ஸ்ரீனிவாசன். லே-லடாக் வரை பைக்கில் பயணித்திருக்கிறார். அதுவும் அச்சம் தரக்கூடிய சவாலான சாலைகளில் சென்று மீண்டும் தனுஷ்கோடி திரும்பி இருக்கிறார். முதலில் மதுரை டு கன்னியாகுமரி. அங்கிருந்து லடாக். பிறகு அங்கிருந்து தனுஷ்கோடி. இதுதான் இந்த 25 இளைஞரின் சாகசப் பயணத்தில் வரைபடம்.

யார் இந்த இளைஞர்? ஏன் இந்தச் சாகசம்? அவரே சொல்கிறார் படியுங்கள்.
"சின்ன வயதில் எனக்கு எல்லோரையும் போல எனக்கும் காது கேட்டது. ஆனால் நான்காம் வகுப்புக்குப் பிறகு ஒரு காது சுத்தமாகக் கேட்கவே இல்லை. என்ன பிரச்சினை? ஏன் இப்படி ஆனது எனத் தெரியாது. அம்மாதான் எனக்கு திடீரென்று கேட்பதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு மருத்துவரைப் பார்த்தோம். 99 சதவீதம் ஒரு காது கேட்கும் திறனை இழந்திருந்தது" எனத் தனது கடந்த காலத்தைப் பற்றிய பேசும் இந்தச் சோக நாயகன் இன்றைக்கும் ஒரு சாதனை நாயகன்.
குங்கும ஸ்ரீனிவாசனுக்கு மதுரையில்தான் வசிக்கிறார். அப்பா சேர்மக்கனி சொந்தமாகத் தொழில் செய்கிறார். அம்மா மங்களேஸ்வரி வீட்டையும் கூடவே எக்ஸ்போர்ட் தொழிலையும் நிர்வகிக்கிறார். ஒரு தம்பி. குங்கும ஸ்ரீனிவாசன் தான் வீட்டுக்கு மூத்த பிள்ளை.

சிறுவயதில் கேட்கும் திறனைக் காது இழந்ததால் வீட்டில் அவரைப் பெற்றோர் பொத்திப் பொத்தி வளர்க்கவில்லை. 'வெளியே போய் உலகத்தைப் பார்' என அனுப்பிவிட்டனர். அதன்பிறகுதான் இந்த இளைஞருக்கும் நாம் மட்டும் குறையோடு இல்லை. நம்மைப் போல் பலர் இருக்கிறார்கள் என அறிகிறார். அதற்கு இவர் எம்.பி.ஏ. வரை படிக்க வேண்டி இருந்தது.
"ஏன் என்று தெரியவில்லை. திடீரென்று தான் இப்படி காது கேட்காமல் போச்சு. சின்ன வயதில் கன்னத்தில் அறைவது, திடீரென்று காதிற்குள் வந்து காட்டுக் கூச்சலாய் கத்துவது, இப்படி விளையாட்டாக செய்யும் காரியம் கூட காதை செவிடாக்கிவிடும். அதைப் பலர் அறிவதில்லை. இந்த உலகத்தில் தொடர்புதான் ரொம்ப முக்கியம். எங்களுக்கு அதுவே பிரச்சினை. இனிமேலாவது விளையாட்டா இந்த மாதிரியான விஷயங்களை செய்யாதீர்கள்.

பொதுவா காது கேட்க ஒரு மிஷின் போடுவார்கள். அது செளகர்யமா இருக்காது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பயங்கரமா காது வலி எடுக்கும். ஏதோ உள்ள ஒரு ஸ்பீக்கர் இருப்பதைப் போல உணர்வு இருக்கும். அதனால் தலைவலி வரும். இதைப் போட்டு இயல்பாக இருக்க முடியாது. ஆகவே பலர் அதைக் கழற்றி வைத்துவிடுவாங்க. காது மிஷினை ஏற்றுக் கொள்ளவே 3 வருஷம் ஆனது. இதற்கான விழிப்புணர்வுக்காகவே நான் இந்தப் பயணத்தைத் தொடங்கினேன்" என்கிறார் ஸ்ரீனிவாசன்.

தன்னை போல் காது கேட்பதில் குறைபாடு உடையவர்களின் நம்பிக்கையைக் கூட்டுவதற்காக 10 ஆயிரம் கி.மீட்டர் வரை பைக்கில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு, அதை முழுமையாக வென்றும் காட்டி இருக்கிறார். இதுவரைக் காது கேட்காதவர்கள் யாரும் இவரைப்போல் ஆபத்தான சாலையில் பைக் ரைட் செய்ததில்லை. அதில் இவர்தான் உலக அளவில் முன்னோடி.

பைக் பயணம் மீது எப்போது ஆசை வந்தது என்றோம்.
"பைக் ரைட் மேல் ஆசை இல்லை. எனக்கு ட்ராவல் மேல் ஆசை இருந்தது. நிறைய வெளி உலகத்தைப் பார்க்க விரும்பினேன். அதனால்தான் பைக் ரைட் செய்ய ஆரம்பித்தேன்" எனச் கூறும் ஸ்ரீனிவாசன் முறையாக தன் பைக் ரைட்டை கன்னியாகுமரியில் ஆரம்பித்து கொச்சி டு புனே. பின் குஜராத் படேல் சிலை வழியே kishtwar போய் இறுதியாக லே- லடாக். மீண்டும் மணாலி வழியே சண்டிகர் வந்து நாக்பூர் சேர்ந்தார். பின் ஹைதராபாத் வழியே சென்னை வந்து தனுஷ்கோடியில் பயணத்தை முடித்துள்ளார்.
சரியாகச் சொன்னால் 10 ஆயிரத்து 41 கிமீட்டரை பைகில் சுற்றிக் காது கேளாதோர் குறித்து விழிப்புணர்வை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் ஒரு உலக சாதனையை எட்டிப் பிடித்துள்ளார்.

இதில் உலகில் மிக மோசமான சாலை kishtwar இல் தான் தொடங்குகிறது. அதில் இந்தக் காது கேட்காத இளைஞர் பைக் பயணத்தை முடித்துள்ளார். லடாக்கில் கடும் பாறை சரிவில் ஓடும் நதிநீர் உறை பனி அளவுக்குக் குளிரும். அதில் பயணம் என்றால் சும்மாவா?

குங்கும ஸ்ரீனிவாசன் இந்தப் பயணத்திற்கு லட்ச ரூபாய் மேல் செலவழித்துள்ளார். அந்தப் பணத்தை இவர் யாரிடம் இருந்தும் பெறவில்லை. சிறுவயதிலிருந்து சேர்த்த பாக்கெட் மணி இது. ஸ்ரீனிவாசன் 2 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளார்.

முன்பின் பைக் ரைட் பற்றி அனுபவம் இல்லாததால் இவர் முறைப்படி சில நாள்கள் பயிற்சிக்குச் சென்றுள்ளார். அதன் பிறகுதான் இந்த முயற்சி. கரடுமுரடான பயணத்தில் இவருக்குச் சாலை விபத்து நடந்துள்ளது. ஆகவே பயணத்தை முடித்துக் கொள்ளும்படி ஆர்.பி.எஃப் வீரர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் இரண்டு நாள் மருத்துவ ஓய்வுக்குப் பின் மனம் தளராமல் சாகசத்தை முடித்துள்ளார் ஸ்ரீனிவாசன்.

"என் வாழ்நாளில் மறக்க முடியாத வலி அதுதான். பயணத்தை ப்ரேக் செய்யச் சொன்ன போது நான் மறுத்தேன். அதற்காக ஆர்.பி.எஃப் அதிகாரிகள் எனக்கு சல்யூட் அடித்தனர். அதுவே எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம்" என்கிறார் இந்த வீரர்.

-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications