பிஎப் பணம்.. வருங்கால வைப்பு நிதி தொடர்பாக பிரச்சனையை தீர்க்க 27ம் தேதி சூப்பர் வாய்ப்பு
மதுரை: வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று இ.பி.எப்.ஓ. குறித்த சந்தேகம் மற்றும் குறைகளை தீர்க்கலாம்.. பிஎப் அதிகாரிகளை நேரடியாகவே சந்தித்து உங்களை குறைகள் குறித்து முறையிட முடியும். இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மதுரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில், நிதி உங்கள் அருகில் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் அமீயாகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த முகாம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்கும் இ.பி.எப்.ஓ. குறித்து குறைகளை தீர்க்க t.Ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவுசெய்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம். இந்த முகாம் மதுரையில் பழங்காநத்தம் இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகத்திலும், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்தில் அந்தந்த இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகங்களிலும் நடைபெறுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 2023-2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கு விவர அறிக்கையை சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023- 2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விவர அறிக்கை, தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளம் (http: // cag.gov.in / ae / tamil-nadu/en )-ல் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு விவர அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் உள்நுழைந்து '' online services - want to know your GPF status '' மெனுவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலக வலைதளத்தில் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications