அமுல் நிறுவனம் வருவதால் ஆவின் பால் உற்பத்தி குறையவே குறையாது.. அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி!
மதுரை : அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்வதற்கு எதிராக சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய நிலையி, அமுல் நிறுவனத்தால் ஆவின் பால் உற்பத்தி குறையாது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமுல் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை அமுல் நிறுவியுள்ளது என்றும், அமுல் பால் கொள்முதல் செய்தால் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார். அதேசமயம், அமுல் நிறுவனம், ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை என விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி, உத்தமநாயக்கனூர், கோட்ட நத்தம்பட்டி, வீரபெருமாள்பட்டி பால் உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாடுகள் வாங்க கடன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆவின் ஐஸ்கிரீமுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.
ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளின் பராமரிப்பு செலவு, அந்த மாடுகளுக்கு நோய் வந்தால் அதனை தடுக்க நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டி இருக்கிறோம்.
முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாகவே இருக்கிறது. ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே அமுல் நிறுவனம் வருவதால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது." எனத் தெ












Click it and Unblock the Notifications