ஆதம்பாக்கம் சத்யா கொலையால் மனம் குமுறுகிறது.. சினிமாவில் பள்ளிச் சீருடை காதல் வேண்டாம்.. நடிகர் தாமு
மதுரை: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவம் பெண்களை பெற்ற தந்தையாக எனக்கு மனம் குமுறுகிறது என மதுரையில் நடிகர் தாமு பேட்டி அளித்துள்ளார்.
உலக உணவு தினத்தினை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆடிட்டர் சேது மாதவா எஸ்.வி.எஸ். கடலை மாவு நிறுவன செயல் இயக்குனர் சூரஜ் சுந்தர சங்கர் தொழிலதிபர் மற்றும் ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் ஆனந்த் காசிமணி எழுத்தாளர் ஆதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தாமு பங்கேற்பு
இந்நிகழ்வில் திரைப்பட நடிகரும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் சீடருமான தாமு கலந்து கொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி உணவுப்பொருட்களை வழங்கினார். முன்னதாக பார்வையற்றோரிடம் உரையாற்றிய நடிகர் தாமு அவர்களின் வேண்டுகோளை ஏற்று மிமிக்ரி செய்து காட்டினார்.

இளைஞர்களின் போதை பழக்கம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் தாமு, இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர், போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர வேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது முதல்நாள் காட்சி பார்த்தபின் ரசிகர்கள் கூறும் கருத்தே அந்த படம் வெற்றியா தோல்வியா என்பதை நிர்ணயித்துவிடும்.

ஓடிடி
சினிமாவை ஓடிடியில் பார்ப்பதை விட திரையங்கில் பார்த்து ரசிப்பது தான் நன்றாக இருக்கும். எவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் சினிமாவை திரையரங்குகளில் தான் பார்க்க வேண்டும் என்பது எனது எண்ணம், திரைப்படங்களில் பாசிடிவ், நெகடிவ் இருக்கிறது இளைஞர்கள் பாசிட்டிவானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மது அருந்த கூடாது
சினிமாவில் போதை காட்சிகளில் மது அருந்தக் கூடாது என எழுத்து போடுவது ஏமாற்று வேலை, இது பெரிய மனமாற்றத்தை தராது. நான் திரைப்படம் இயக்கினால் போதை காட்சிகள் இல்லாமல் எடுப்பேன். சினிமா என்பது பொழுதுபோக்குதான். படம் பார்க்கும் போது டைம் போவதே தெரியாமல் இருப்பது தான் நல்ல சினிமா அது தான் வெற்றிப்படமாக அமையும்.

நகைச்சுவையில் உருவ கேலி கூடாது
திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை உருவக்கேலி செய்வது தடுக்க வேண்டும், யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது. சென்னை கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது. பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது, நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

சினிமா துறை
மாணவர்கள் மீது சினிமாத் துறையினர் அக்கறை காட்ட வேண்டும். சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தவறான தாக்கம் ஏற்படும். எனவே இது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும், சினிமா மூலம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

கல்லீரல் பாடம்
மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மது பழக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள், மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் ஸ்மோக்கிங், ட்ரிங்கிக் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் மகளிர் கல்லூரியில் போதா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாமு பேசும் போது, அவர் நிஜ நிகழ்வுகளை எடுத்துரைத்ததால் மாணவிகள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications