நடிகை ரோஜா முகமெல்லாம் ஒரே சிரிப்பு.. "அதை" பற்றி மட்டும் வாயே திறக்கலியே.. மதுரையில் திடீர் பரபரப்பு
மதுரை: ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா, மதுரை மக்களிடம் பூரித்துப்போய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா.. ஆந்திராவின் அமைச்சராக பல்வேறு திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி கொண்டிருப்பவர்.
இந்த அதிரடிகளுக்கெல்லாம், தனக்கு பெரிதும் காரணமாகவும், உந்துதலாகவும் இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார் ரோஜா.

நடிகை ரோஜா: இதில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரோஜா ஆரம்ப காலம் முதலே ஆதரவாக இருந்து வருகிறார்.. அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல ஏற்பாடுகளையும் விடாமல் ரோஜா செய்து கொண்டிருக்கிறார்.. அதே முயற்சியை தமிழகத்திலும் ஏற்படுத்தவும் முயன்றார்.. அதற்காகவே கடந்த வருடம், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.. தொடர்ந்து ரோஜா முன்வைத்து வரும் கோரிக்கைக்கும் முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுத்து வருகிறார்..
இதன்காரணமாகவே, மின்னலை விட வேகமானவர் என்று புகழ்ந்திருந்தார் ரோஜா... அதேபோல, முதல்வர் ஸ்டாலினின் ஒவ்வொரு பிறந்தநாள் விழா கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.. தமிழிலும் தெலுங்கிலும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உரையாற்றுவது, திமுக தொண்டர்களிடம் கவனத்தை பெற்று வருகிறது..
"முதல்வர் ஸ்டாலின் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார். அந்த எதிரி யார் தெரியுமா? அந்த எதிரி கலைஞர் கருணாநிதி அவர்கள்தான்.. கருணாநிதியை விஞ்சிய முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும்" என்று ரோஜாவின் பேச்சுக்கள் திமுகவில் வைரலாகிவிடும்.
கருணாநிதி: கருணாநிதியை பாராட்டிய ரோஜா, பிறகு ஸ்டாலினை பாராட்டிய ரோஜா, பிறகு உதயநிதியையும் பாராட்டி பேசியிருக்கிறார்.. பேசியிருந்தார்.. "விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன்.. நானும் சினிமாவில் இருந்து வந்துள்ளேன்.. உதயநிதியும் சினிமாவில் இருந்து வந்தவர்.. ஒரே துறையில் நாங்கள் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று செய்தியாளர்களிடம் பேசியபோது, புளகாங்கிதம் அடைந்திருந்தார்.
இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.. இதனை தொடர்ந்து, புது சக்தியுடன் ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்கிறேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சன்னதிகள்: அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஷ்வர் சன்னதிகளுக்கு சென்று ரோஜா சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி சென்று வழிபட்டார். பின்னர் பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் கலைநுட்பங்களை வியந்து பார்த்தார். பின்னர் அம்மன் சன்னதி வழியாக வெளியே வந்து புறப்பட்டுச் சென்றார். பிறகு செய்தியாளர்களிடம் ரோஜா பேசும்போது சொன்னதாவது:
"மதுரை மீனாட்சி அம்மன் ஆசீர்வாதத்துடன் 2 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளேன். 2013-ம் ஆண்டு இங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றேன். அதன் பிறகு அமைச்சரானபின் இப்போதுதான் இங்கு வந்திருக்கிறேன். அம்மனுக்கு பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளேன்... சொக்கரையும் கும்பிட்டு விட்டு உத்வேகத்துடன் மக்களுக்கு நல்லது செய்ய போகிறேன்.. இந்த சந்தோஷத்தின் மகிழ்ச்சியுடன் இன்னும் எனர்ஜியாக பணியாற்றுவேன்.. புது சக்தியுடன் ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்கிறேன் என்றார் ரோஜா.
பரபரப்பு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ரோஜா வந்திருப்பதை கேள்விப்பட்டுமே, பக்தர்கள் ஏராளமானோர் அவரை பார்க்க திரண்டுவிட்டதால், ஒரே பரபரப்பாகிவிட்டது.. தரிசனத்தை பற்றி மட்டுமே செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட ரோஜாவிடம், அரசியல் தொடர்பாக கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.. ஆனால், அதற்கு ரோஜா பதில் அளிக்க மறுத்து விட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications