Exclusive: அதிமுகவில் சசிகலா..? ஓபிஎஸ் நிலைப்பாட்டிற்கு செல்லூர் ராஜூ ஆதரவு..!
மதுரை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். பொறுப்புடன் பதில் அளித்திருப்பதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசுபவரல்ல என செல்லூர் ராஜூ ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக நம்மிடம் மனம் திறந்து அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு;

பொறுப்புடன் பதில்
''அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சசிகலா குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பி.எஸ். பொறுப்புடன் பதில் அளித்தார். சசிகலாவை சேர்ப்பது குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்சிக்கு தலைவராக விளங்கக்கூடியவர் இப்படித்தானே பதில் சொல்ல வேண்டும், நீங்களே சொல்லுங்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசினால் அது சரியாக இருக்குமா.''

ஆயிரம் பேர்
''ஓ.பி.எஸ்.சை பொறுத்தவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசமாட்டார். ஜெயக்குமார் பேட்டி குறித்து எனக்குத் தெரியாது, நான் பார்க்காததால் அது குறித்து பேச விரும்பவில்லை. அதிமுக ஜனநாயக இயக்கம், ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். சசிகலா அரசியல் செய்ய விரும்புகிறார், அது அவரது விருப்பம். அதனால் அவரது சுற்றுப்பயணம் குறித்து நான் எப்படி கருத்துச் சொல்ல முடியும். ஜனநாயக நாட்டில் தம்பி நீங்க நினைத்தால் கூட ஒரு அரசியல் கட்சியை தொடங்கலாம். இதனால் இதற்கெல்லாம் கருத்துக் கூறுவது முறையாக இருக்காது.''

தலைமை பண்பு
''ஓ.பன்னீர்செல்வம் ஒரு தலைவருக்குரிய பண்புடன் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால் யாருக்கு என்ன வந்துவிட்டது'' என ஒ.பி.எஸ்.ஸை விட்டுக் கொடுக்காமலேயே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். இதனிடையே, கே.பி.முனுசாமி குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுத்துவிட்டார். சசிகலா விவகாரத்தை மையமாக வைத்து அதிமுக மேல்மட்ட நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துக்களால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

கட்சியில் பூகம்பம்
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டர்களை நம்பித் தான் அதிமுக என்றும் கட்சியில் மாற்றம் அவசியம் எனவும் கூறி புயலை கிளப்பியிருந்தார் செல்லூர் ராஜூ என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் அதிமுகவில் பூகம்பம் வெடித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications