அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காரை கொளுத்திய திமுக நிர்வாகி.. கொலைவெறித் தாக்குதல்.. பொங்கிய எடப்பாடி!
மதுரை: மதுரை கருவனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைக்கப்பட்டு, வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பொன்னம்பலம் கடந்த 2001-2006 காலகட்டத்தில் சமயநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர்.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருவிழாவின்போது கோவில் மரியாதை அளிப்பதில் யாருக்கு முன்னுரிமை என்பதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்திற்கும், திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வேல்முருகன் தரப்பினர் பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்று கற்களை வீசி தாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த டிவி, ஃப்ரிட்ஜ், பைக், கார் ஆகியவற்றை அடித்து உடைத்துள்ளனர். மேலும், அவரது காரை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர்.
திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் பொன்னம்பலத்தின் உறவினர்கள் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காருக்கு தீ வைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகியுள்ளனர். கோயில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதில், முன்னாள் எம்.எல்.ஏவின் வீடு சூறையாடப்பட்டு கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மதுரை மாவட்டம் கருவனூரில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கொடூரமாக தாக்கியும், அவரது வீட்டை சூறையாடியும், அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையை மேற்கொண்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் மூர்த்தி அந்த ஊர் கோயிலுக்கு வந்து சென்றபின்பு இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய-நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதும் மிகுந்த கண்டணத்துக்குரியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத வகையிலும், சாமானியர்கள் அஞ்சும் வகையிலும் அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது.
#WATCH | Madurai, Tamil Nadu | House of former AIADMK legislator Ponnambalam vandalised, his vehicle set on fire allegedly by the supporters of DMK's Velmurugan after the two sides argued over offering prayers at Karuppasamy Temple first. pic.twitter.com/bRxBdyT6FE
— ANI (@ANI) June 25, 2023
இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதுடன், பொன்னம்பலம் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications