லெட்டர் எழுதுறார்.. கமிட்டி அமைக்கிறார்.. வேலை எதுவும் நடக்கல - ஸ்டாலினை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
மதுரை : முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள, 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வையுங்கள் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை மட்டும் பட்டியலிட அறிவுறுத்தியுள்ளது சாலச்சிறந்தது அல்ல என முன்னாள் அமைச்சர் ஆ.ர்பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
முதல்வரின் இந்த நடவடிக்கை, மக்கள் கோரிக்கைகளுக்கு உச்சவரம்பு விதிப்பது போல் உள்ளதாகவும் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தங்கள் தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை, முன்னிலைப்படுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு பட்டியல் அனுப்ப வேண்டும் என்று கடிதம் எழுதினார். பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களை அடையாளம் கண்டு, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அவரே செய்யலாம்
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சர் கையில் தான் காவல்துறை உள்ளது. முதலமைச்சர் அதிகாரிகளைக் கொண்டு, இரும்புக்கரம் கொண்டு அடக்கலாம், இதைத்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்.

கமிட்டி அமைக்கிறார்
அதேபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரல் எழுப்பி வருகிறார். ஆனால் முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதில் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு, 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவேண்டும் என்று கூறுகிறார்.

எனது தொகுதியில்
எனது திருமங்கலம் தொகுதியை எடுத்துக் கொண்டால், மூன்று ஒன்றியங்கள், 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள், 1 நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளன. ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர். ஏற்கனவே இந்த தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், திருமங்கலம் சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் அரசை வலியுறுத்தி தான் வருகிறோம்.

ஆயிரம் கோடி போதாது
தற்போது முதலமைச்சர் ஒரு தொகுதிக்கு 10 கோரிக்கை என்று கூறுகிறார். இந்த 10 கோரிக்கை என்பது ஒரு ஆண்டிற்கு மட்டுமா அல்லது ஐந்தாண்டு மட்டுமா என்பதை முதலமைச்சர் தெரிவிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களை செயல்பட மக்கள் அனுமதித்து உள்ளனர், அதில் பத்து கோரிக்கையை மட்டும் செய்ய முடியுமா? மக்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன. இந்த ஆயிரம் கோடி என்பது போதாது.

மாற்றாந்தாய் மனப்பான்மை
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் எந்த வளர்ச்சி திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு அணுகுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் வேறுபாடு இன்றி திட்டங்கள் வகுக்கப்பட்டது.

திட்டங்களை செயல்படுத்தவில்லை
முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் உச்சவரம்பு இன்றி கோரிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சிக்கான வழித்தடமாக இருக்காது. முதலமைச்சர் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக கடிதம் எழுதி உள்ளார்" என விமர்சித்துள்ளார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications