சீண்டு மூட்டி விடும் சில பேர்.. எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி! கட் அண்ட் ரைட்டாக பேசிய செல்லூர் ராஜூ
மதுரை: ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் பெண்களை கூட்டத்திற்கும், கோஷம் போடுவதற்கும் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள், ஆனால் எந்த முக்கியத்துவத்தையும் தர மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும், எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமையும் எனவும் உறுதிபட கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி ஆலோசனை கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது, இதற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சுதந்திர அசோக் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கழக மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்ட பொறுப்பாளருமான பா.வளர்மதி, மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் கே.ராஜூ," புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்தார், குறிப்பாக பின் தூங்கி முன் எழும் பெண் சமுதாயத்திற்கு ஓய்வு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி திட்டத்தை வழங்கினார்.அதேபோல பெண்கள் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோ படைகள் அமைத்தார், அதேபோன்று இந்த இயக்கத்தில் பெண்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும் உடனடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ராணுவ கட்டுப்பாடு போல இந்த இயக்கம் இருந்தது வருகிறது.
அதனால்தான் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பெண்கள் வாக்கு பெட்டிகளில் எண்ணிக்கையின் போது திமுக பயந்து தான் இருக்கும். ஏனென்றால் பெண்கள் ஓட்டு அதிகளவில் அதிமுகவிற்கு கிடைக்கும். அம்மாவைப் போல எடப்பாடியாரும் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளார் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை போல இங்கு ஆண், பெண் பாகுபாடு இந்த இயக்கத்தில் கிடையாது, ஆண்கள், பெண்கள் என யார் உழைத்தாலும் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் பெண்களை கூட்டத்திற்கும், கோஷம் போடுவதற்கும் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள், ஆனால் எந்த முக்கியத்துவத்தையும் தர மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் அதனால்தான் அதிமுக 53 ஆண்டு கால வரலாற்றில், 31 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தது இதற்கு பெண்களின் வாக்குவங்கி தான் காரணம்.
அதேபோன்று எடப்பாடியார் திராவிடத்தின் பாரம்பரிய மிக்க தலைவராக உள்ளார். இன்றைக்கு எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும். சில பேர் சிண்டு மூட்டி விடுகிறார்கள். அதை பற்றி நீங்கள் நம்ப வேண்டாம். இன்றைக்கு திமுக மக்களை நம்பி இல்லை ஊடகம், பத்திரிகை மற்றும் பணத்தை நம்பி தான் உள்ளது, குதிரையின் கடிவாளத்தை போல நீங்கள் அனைவரும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் என்று தான் சிந்தனையுடன் உழைக்க வேண்டும்.
உழைத்தவருக்கு அம்மா பதவி கொடுத்த அழகு போல நீங்கள் உழைத்தால் உங்களுக்கு எடப்பாடியார் பதவி கொடுத்து அழகு பார்ப்பார். இன்றைக்கு ஸ்டாலின் விடியும் ஆட்சி என்று சொன்னார்கள் ஆனால் இன்றைக்கு விடியல் இல்லாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார், நான் முதலமைச்சராக வந்தால் என்னை எளிதில் பார்க்கும் என்று சொன்னார் இன்றைக்கு ஸ்டாலினை எளிதில் பார்க்க முடியுமா? ஆனால் எடப்பாடியார் அப்படி இல்ல முதலமைச்சர்கள் இருக்கும் பொழுதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது எல்லோரும் எளிதாக பார்க்க முடியும்.
இன்றைக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை தந்துவிட்டு 6000 ரூபாய் வரை கூடுதல் செலவை பெண்கள் தலையில் ஸ்டாலின் சுமத்தி விட்டார். எடப்பாடியார் ஆட்சியில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் அளவில் பெண்கள் திட்டங்களால் பயன்பட்டார்கள். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் 30 ஆயிரம் கூட திட்டங்களால் பெண்கள் பயன்பெறவில்லை
இன்றைக்கு வரி மேல் வரி விதித்து விட்டனர் இனிமேல் நடப்பதற்கு சாலைக்கு கூட வரி போட்டு விடுவார்கள், அதே போன்று அம்மாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், இருசக்கர வாகன திட்டம், அம்மா பரிசு பெட்டகம், அதேபோன்று கடுமையான விலைவாசி உயர்வு, பாலியல் தொல்லைகள் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை பெண்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்
ஆண்களாகிய நாங்கள் வீட்டின் வாசல் வரை தான் இருக்க முடியும், பெண்களாகிய நீங்கள் அடுப்பாங்கரை வரை சொல்லலாம், ஆகவே ஒட்டுமொத்த பெண் சமுதாய மக்களிடத்தில் எடுத்து கூறி அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக பெண்கள் செயல்பட வேண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் வருவார், அப்பொழுது திமுக அரசால் பெண்களுக்காக நிறுத்திவைக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் மீண்டும் வழங்குவார்" என பேசினார்.
-
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications