50 மணி நேரங்களாக வேனில் காக்க வைக்கப்பட்ட வயதான கொரோனா தம்பதி.. மதுரை ஆட்சியர் தலையிட்டு தீர்வு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் மருத்துவமனையில் படுக்கை வசதி காலியாக இல்லாததால் கொரோனா சிகிச்சைக்கு வந்த வயதான தம்பதியை வேனிலேயே 50 மணி நேரம் காத்திருக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக மருத்துவமனையின் அனைத்து வார்டுகளும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன.

சிறப்பு சிகிச்சை பிரிவு

சிறப்பு சிகிச்சை பிரிவு


தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வயதான தம்பதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வேனில் வந்தனர்.

படுக்கை வசதி

படுக்கை வசதி

அவர்களுக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை. மேலும் ஆக்ஸிஜன் அளவும் மிகவும் குறைவாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து முதியவரை மட்டும் மருத்துவமனை வளாகத்தில் வேனிலேயே காத்திருந்து சிகிச்சை பெறுமாறும், படுக்கை கிடைத்தவுடன் உள்ளே அழைத்து கொள்வதாகவும் கூறினர். மூதாட்டியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

வேனில் காத்திருந்து

வேனில் காத்திருந்து

வேனில் காத்திருந்து சிகிச்சை பெற்று வந்த முதியவரை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த வயதான தம்பதியின் பேத்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகருக்கு இ மெயில் மூலம் புகார் கொடுத்துள்ளனர். அதில் தான் ரஷ்யாவில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருவதாகவும் தனது தாத்தா, பாட்டி இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாத்தாவுக்கு வேனில் சிகிச்சை

தாத்தாவுக்கு வேனில் சிகிச்சை

இவர்கள் இருவரும் ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது தாத்தாவுக்கு வேனில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாட்டித்து சிகிச்சை அளிக்கவில்லை. 50 மணி நேரம் கழித்து வேனில் இருந்த அவர்களை திடீரென வீட்டுக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

தற்போதைய சூழலில் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குறை சொல்ல முடியாத நிலை உள்ளது. ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவி செய்யுமாறு வயதான தம்பதியின் பேத்தி ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் அந்த தம்பதி வேனில் இருந்து 1 மணி நேரத்தில் 2ஆவது மாடியில் படுக்கை வசதி செய்யப்பட்டு ஏற்பாடு செய்து தரப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+