சிக்கலை ஏற்படுத்தும் CCTV..திமுக அரசு தான் காரணம்! ’இப்படி’தான் செய்ய வேண்டும்..டாக்டர் சரவணன் பகீர்
மதுரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி திடீர் திடீரென செயல் இழப்பது பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சிசிடிவி பழுது குறைபாட்டுக்கு தமிழ்நாடு அரசே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.
உதகை, ஈரோட்டைத் தொடர்ந்து தென்காசி தொகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளன. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் 99 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததாக புகார் எழுந்துள்ளது.

நேற்று தென்காசியில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதால் 99 சிசிடிவி கேமராக்களும் பழுதானதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக அந்த தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் புகார் அளித்தார்.
சிசிடிவி பழுது: இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் சிசிடிவி கேமராக்கள் பழுது சரி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருவதாகவும், அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஸ்ட்ராங்க் ரூம்களில் சிசிடிவி பழுதானது அரசியல் கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் இப்படி நடக்காத நிலையில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டாக்டர் சரவணன்: இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்படும் குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார். இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்,” தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. உள்ளூர் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மத்திய அரசு பாதுகாப்புக்காக துணை ராணுவ படையை மட்டுமே கொடுத்திருக்கிறது.
மாநில அரசே பொறுப்பு: ஆனால் அங்கு சிசிடிவி மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே பார்த்துக் கொள்கிறது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றுபவர்கள் தான். எனவே ஷார்ட் சர்க்யூட் மற்றும் மின் பிரச்சினைகள் காரணமாக சிசிடிவி கேமரா பழுது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு மாநில அரசு தான் காரணம். வேண்டும் என்றே சில இடங்களில் மின்தடைகளை ஏற்படுத்துவதாக புகார் வந்துள்ளது. பவர் கட் செய்ததால் ஆட்சியை இழந்த கட்சி திமுக என்பதை மறந்து விடக் கூடாது.
பவர் கட்: மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் போதே சென்னையில் பவர் கட் செய்தது திமுக அரசு தான். அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்தடையை ஏற்படுத்துவது பெரிய விஷயம் இல்லை. அதே நேரத்தில் வெளியில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் எந்த குளறுபடியும் செய்ய முடியாது. அது ஒரு கால்குலேட்டர் போல.. அதே நேரத்தில் உள்ளே செல்லும்போது அதில் மாறுதல்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே எண்ணிக்கை மையங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
உரிய வசதிகள்: கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை.. அவர்களுக்கு குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். அது மட்டும் இல்லாமல் இது போன்ற குளறுபடிகள் நடந்திருந்தால் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு பதிவு இயந்திரங்களை பதிவான வாக்குகளோடு வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ண வேண்டி வரும்” எனக் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications