தமிழகத்தில் திமுக ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது- அடித்து சொல்லுவது அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை: தமிழகத்தில் திமுக ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது; தமிழக சட்டசபைக்கு 2024-ல் தேர்தல் வரக் கூடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மத்திய இரண்டாம் பகுதி அதிமுக செயலாளர் ஞானசேகரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது:
ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட்டம் கூடுவது பெரிதல்ல; எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் வருவதுதான் பெரிது. அப்படி அதிமுக கூட்டிய இந்த கூட்டத்துக்கு மக்கள் பெருந்திரளாக வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட நெடிய நாள் திமுக ஆட்சி நீடிக்காது. தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிற ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி.தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு செய்வதறியாது உள்ளனர் திமுஅவினர்.

போலீஸ் அவல நிலை
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று விளம்பரம் தேடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் வரும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நீண்டநேரம் காத்திருக்க கூடிய அவலநிலை உள்ளது.

விளம்பரம், ஊடகம்
எப்படியாவது விளம்பரங்கள் மூலமாகவே இந்த ஆட்சியை நிலைநிறுத்த விடலாம் என்று பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் ஊடகம் மூலமாக ஆட்சியைத் தக்க வைக்கலாம் என கருதுகிறார் முதல்வர் ஸ்டாலின். இது போதாது என்று சிலர் போலியாக கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றனர். மக்களுடைய ஆதரவு திமுக ஆட்சிக்கு கிடையாது.

விரைவில் தேர்தல்
திமுகவுக்காக பல்வேறு கட்டங்களில் உழைத்தவர்கள், அக்கட்சியின் உண்மை விசுவாசிகள் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்.
திமுகவிற்கு மாற்று கட்சியாக தமிழக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு இருக்கக்கூடிய கட்சி என்றால் அது அதிமுக தான். 2024 அல்லது 2026 ல் தேர்தல் வரும். நிச்சயம் நமக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை மக்கள் தருவார்கள். நிச்சயம் மீண்டும் அதிமுகதான் ஆளப் போகிறது.

அடுத்து அதிமுக அரசுதான்
அரசியல் வரலாற்றில் ஒரு முறைக்கு இருமுறை திமுக வென்றதே கிடையாது. ஆனால் அதிமுக தான் இருமுறை தொடர்ச்சியாக வென்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.தமிழகத்தில் அதிக நாள் ஆண்ட கட்சி என்றால் அது அதிமுக தான். தமிழ்நாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சி என்றால் அது மறைந்த எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக தான். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வார்த்து எடுக்கப்பட்ட அதிமுகவை இன்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் அதிமுகவின் வெற்றிக்காக நாம் இணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications