"எடப்பாடிதான் A1 என்றால் புடிச்சு ஜெயில்ல போடுங்க.. திமுக ஆட்சி தானே?”- திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்
மதுரை: "எடப்பாடி பழனிசாமி அக்யூஸ்ட் என்றால் போலீஸ் என்ன செய்கிறது? ஏ1 ஆக இருக்கிறவரை ஜெயிலில் போட வேண்டியதுதானே? திமுகதானே ஆட்சியில் இருக்கிறது. திராணி இருந்தால் கைது செய்யுங்கள். திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டதே" என்று கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கொடநாடு கொலைகள் குறித்துப் பேசியிருந்தார். செங்கோட்டையன் திமுகவின் பி டீம் என்ற அதிமுக தலைமையின் விமர்சனத்துக்கு, "எடப்பாடி பழனிசாமி ஏ1" என்று கூறினார் செங்கோட்டையன்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனிடம், கொடநாடு வழக்கில் ஏ1 எடப்பாடி பழனிசாமி தான் என்ற வகையில் செங்கோட்டையன் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், 'பிடிச்சு உள்ள போடுங்களே... சட்டப்படி செய்யுங்களேன். அவர்தான் அக்யூஸ்ட் என்றால் போலீஸ் என்ன செய்கிறது... ஏ1 ஆக இருக்கிறவரை ஜெயிலில் போட வேண்டியதுதான் திமுகதானே ஆட்சியில் இருக்கிறது. திராணி இருந்தால், சரியான சட்டங்கள் இருந்தால் கைது செய்யுங்கள். திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டதே" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது தெய்வத்தின் தீர்ப்பு. எடப்பாடி பழனிசாமியை விட வயதில் மூத்தவர் என்பதாலேயே ஒருவர் மூத்த நிர்வாகியாகி விட முடியுமா? பழனிசாமிக்கு முன்பாக பிறந்துள்ளவர் என்ற ஒரு தகுதியை மட்டும் செங்கோட்டையன் பெற்றுள்ளார். அதை தவிர மற்ற அனைத்து தகுதிகளையும் பழனிசாமி பெற்றுள்ளார்.
செங்கோட்டையன் முதல்வர் வாய்ப்பை 2 முறை விட்டுக் கொடுத்துள்ளதாக கூறுகிறார். வாய்ப்பு வந்தும் ஏன் விட்டுக் கொடுத்தார்? வாய்ப்பு வந்தால் யாராவது முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார்களா?. பிக் பாக்கெட் அடிப்பது போல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் முதலமைச்சராகும் கனவில் இருந்தார். அதுவே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம்.
தி.மு.க வெற்றி பெறும் என்று கூறிய ஓ. பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் சேர்ந்ததாலேயே அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன். அவர் அதிமுகவை பற்றி சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஆளே கிடையாது.
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக சட்டத்தின்படியும், பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டவர்கள். அதனால், செங்கோட்டையன் உள்பட அவர்கள் 4 பேரையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு "பி டீம்" ஆக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் உட்பட எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்கள் எல்லாம் 1972 ஆண்டு முதல் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்தில் உள்ளோம். நாங்கள் சொல்கிறோம், அவர்கள் நான்கு பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம்." என்று தெரிவித்தார்.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications