பிரேமலதா விஜயகாந்த் உடன் அதிமுக முக்கிய புள்ளி சந்திப்பு.. கூட்டணிக்கு அஸ்திவாரம்?
மதுரை: மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துள்ளார். தேமுதிகவின் பூத் முகவர்கள் கூட்டம் நடக்கும் தனியார் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'இல்லம் தேடி, உள்ளம் நாடி' என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். இதை நான் உறுதியாக சொல்கிறேன். இங்கு உள்ளவர்கள் எம்எல்ஏ ஆகலாம். கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி வருகிறார்.
தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாது. தேர்தல் முடிவுக்கு பிறகு எதுவும் நடக்கலாம். 2026-ல் கூட்டணி அமைச்சரவை அமையவே நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். எல்லாக் கட்சியும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை தேமுதிக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் மண்டபத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி தொடர்பாக ஆர்.பி உதயகுமார் பேசினாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications