மதுரை சம்பவம்.. அதிமுகவில் அடிதடி! செல்லூர் ராஜூ Vs டாக்டர்.சரவணன்.. என்ன நடக்கிறது ‘தூங்கா’ நகரில்?
மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டது அக்கட்சி மூத்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர்.சரவணனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பார்த்த உள்ளடி வேலையே தற்போது மோதலாக வெடிக்க காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சட்டமன்றத் தேர்தல் 2026க்காக தற்போதிலிருந்தே தயாராகி வருகிறது அதிமுக. இதற்காக பல ஆய்வுக் குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.

இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செம்மலை உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இறுதியாக இன்னும் சில வாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி இடம் அறிக்கை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிமுகவினர் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்டது பேசு பொருளானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் மாவட்ட செயலாளரான செல்வராஜ் முன்னிலையில் நிர்வாகிகளை சந்தித்தனர்.
அப்போது திடீரென அங்கு மோதல் ஏற்பட்டது. குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் சரவணன் தோல்வி அடைந்ததற்கும் மூன்றாவது இடத்திற்கு சென்றதற்கும் மாநகர செயலாளர் செல்லூர் ராஜூ தான் காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கைகலப்பும் ஏற்பட்டது. கூட்டத்தை அமைதியாக நடத்த வேண்டும் என செல்லூர் ராஜூ விரும்பினாலும் திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்தில் பேசியவர்கள் அதிமுகவினரே இல்லை. சரவணன் தான் அவர்களை அழைத்து வந்து பேச வைத்தார் என கூறுகின்றனர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள்.
அதே நேரத்தில் கருத்து சொல்ல வந்தவர்கள் அதிமுகவினர் தான், அவர்களை வேறு கட்சி நிர்வாகிகள் என செல்லூர் ராஜூ பொய் சொல்கிறார். குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகிகள் தேர்தல் பணியை சிறப்பாக செய்ததற்காக தலைமையில் பாராட்டை பெற்று இருக்கின்றனர். உண்மை நிலையை சொல்ல வந்ததால் சரவணனின் ஆதரவாளர்கள் என திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஏற்கனவே தனது ஆதரவாளர்களை பேச வைத்து மாநகர் அதிமுக சிறப்பாக செயல்படுவது போல காட்டிக் கொள்வதற்காக செல்லூர் ராஜூ நினைக்கிறார் என்கின்றனர் சரவணனின் ஆதரவாளர்கள்.
மக்களவைத் தேர்தலில் சரவணன் வெற்றி பெற்றால் அம்மாவாசையாக மாறிவிடுவார் என பேசினார்செல்லூர் ராஜு. சரவணன் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக திரை மறைவில் செயலாற்றுவதை போலவே அவரது செயல்பாடுகள் இருந்தது. அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு அதற்கேற்றவாறு தலைமை முடிவு எடுக்க வேண்டும். கருத்து சொல்ல வந்த கட்சியினரை செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள் தாக்க முயற்சிக்கின்றனர். மதுரை மாநகர அதிமுக பின்னோக்கி செல்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதுதான் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கருத்து ஆனால். அதனை செல்லூர் ராஜூ தடுக்க நினைக்கிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications