உதயநிதி துணை முதலமைச்சராக முகூர்த்தம்..பாலாறும் தேனாறுமா ஓட போகுது? வேஸ்ட்.. ஆர்பி உதயகுமார் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். உதயநிதி துணை முதலமைச்சராக ஆகிய பின்பு தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவா போகிறது? கள்ளச்சாரய ஆறு தான் ஓடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

RB Udhayakumar Udayanidhi Stalin politics

நிகழ்ச்சியில் பேசிய அவர்," இன்றைக்கு திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்தை திசை திருப்ப அதிகாரிகள் இடமாற்றத்தை தான் முதலமைச்சர் செய்கிறார். இந்த இடமாற்றத்தால் மக்களின் எதிர்பார்ப்பையும், கோரிக்கையும், திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வயதானவர்கள், விவசாயிகள், கணவரை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என ஒன்பது பிரிவின் கீழ் உள்ளது, திமுக ஆட்சி காலத்தில் முதியோர் ஓய்வு உதவிதொகை மூலம் மாதம் தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மா ஆட்சிக்காலத்தில் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த 2011 திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்காக 1,200 கோடி தான் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் 4,200 கோடியாக இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.

இன்றைக்கு மடிக் கணினி திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். அதுமட்டுமல்ல பள்ளி மாணவர்களிடம் கஞ்சா மாத்திரை உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இந்த 221 நாட்களில் தமிழகத்தில் 656 கொலைகள் நடைபெற்று உள்ளது. தினந்தோறும் கொலைகள் பட்டியலில் உயர்ந்து கொண்டிருக்கிறது தமிழகம் கொலைக்காளமாக மாறி வருகிறது. இதை மீட்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.

மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் வெளிநாடு செல்ல போகிறார், தற்போது உதயநிதி ஒலிம்பிக் போட்டியை பார்க்க பாரிஸ்க்கு சென்று விட்டார், இந்த மூன்று வருடம் எந்த முன்னேற்றமும் இல்லை பூஜ்ஜியம் தான் உள்ளது. திமுக 525 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர் எதையும் செய்யவில்லை. திமுக சாதிக்கவில்லை. ஆனால் சறுக்கியது தான் அதிகரித்து வருகிறது.

இன்றைக்கு மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள், முதியோர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அச்சுத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் அதிகாரிகள் இடமாற்றம் செய்து விட்டால் தீர்வு காண முடியுமா?

உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள் உதயநிதி துணைமுதலமைச்சராக ஆகிய பின்பு தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவாபோகிறது? கள்ளச்சாரய ஆறு தான் ஓடும். இன்றைக்கு அரசு ஊழியர்கள் வயது வரம்பை 62 ஆக உயர்த்த போவதாக பேச்சு வருகிறது. ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் கடன் சுமை 3.50 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டு திவாலாகும் நிலைமை உள்ளது. அவர்களுக்கு வழங்கும் பலனை தள்ளி வைக்கத்தான் இதுபோன்று செய்கிறார்கள், இப்படி செய்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+