அவர் ஒரு தடவ சொன்னா.. ரஜினி ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகமாக பேசுவார்! பஞ்ச் பேசிய செல்லூர் ராஜு!
மதுரை : ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி விட்டார், ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பேசுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "பிரதமர் வேண்டுகோளை ஏற்று 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக அலுவலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி பறக்க விடப்படும்"என்றார்.

ரஜினிகாந்த்
மேலும்," மதுரைக்கு காந்தியடிகள் வந்த பின் தான் மகாத்மா காந்தி என அழைக்கப்பட்டார், ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியது தொடர்பான கேள்விக்கு "ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி விட்டார், ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பேசுவார், திமுக அரசு மீது மக்கள் கொதிப்பு அடைந்து உள்ளனர், திமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்க போகிறது என தெரியவில்லை

டி.டி.வி தினகரன்
திமுக அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை, முதியோர் உதவித் தொகை தங்கு தடையின்றி கிடைக்க முதல்வர் கருணையோடு செயல்பட வேண்டும், டி.டி.வி தினகரன் ஆங்கில நாளிதழ்க்கு கொடுத்த பேட்டி தொடர்பாக கேட்ட கேள்விக்கு டி.டி.வி.தினகரன் அவருடைய கருத்தை சொல்லி உள்ளார், டி.டி.வி தினகரன் பேச்சை நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள போவதில்லை, சசிகலா பேச்சுக்கு நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை

கடிவாளம் கட்டிய குதிரை
அதிமுகவினர் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே நோக்கமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக மட்டுமே, மற்றவர்களை நாங்கள் பொறுப்படுத்துவதில்லை, அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒரு சிலர் அதிமுகவில் இருந்து செல்வதால் அதிமுகவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

நிதியமைச்சர் பி.டி.ஆர்
மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர் குற்றச்சாட்டை முன் வைக்கிறார், நிதியமைச்சர் பி.டி.ஆர் சொல்லும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும், கமிஷனுக்காக நிதியமைச்சர் பி.டி.ஆர் எங்கள் மீது குற்றச்சாட்டை சொல்கிறாரா என தெரியவில்லை, நிதியமைச்சர் பி.டி.ஆர் கமிஷன் கேட்கிறார் என திமுகவினர் சொல்கிறார்கள்" என கூறினார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications