பிரதமர் மோடியைப் பாதுகாக்கும் ஸ்லீப்பர் செல்.. புருடா இளைஞர்.. ஏர் கன்னுடன் மதுரையில் சிக்கினார்!
மதுரை விமான நிலையத்திற்கு நான்கு ஏர் கன் துப்பாக்கிகளை கொண்டு வந்த இளைஞரை பாதுகாப்புப் படை வீரர்கள் மடக்கிப் பிடித்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மதுரை: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பாளராக பணியாற்ற தனி விமானத்தில் போகிறேன் எனக்கு ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது என்று கூறி இளைஞர் ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு ஏர் கன் துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
மதுரை விமான நிலையம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு சக்கர வாகனம் மூலம் விமான நிலையத்திற்கு வந்த வாலிபர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார்.

இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி விசாரணை செய்தனர். அவரிடம் ஒரு ஏக்கன் துப்பாக்கி இருந்தது. இது குறித்து அவர்கள் விசாரணை செய்ததில் அவர் வைத்திருந்த பேக்கில் 3 ஏர்கன் துப்பாக்கி மற்றும் 4 செல்போன்கள் இருந்தன.
தான் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதாகவும், தான் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் கூறினார். இதனைக் கேட்டபிறகே பாதுகாப்பு படை வீரர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.
அவருடைய ஆதார் கார்டை வாங்கிப் பார்த்த போது, அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வெங்கடசமுதிரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் அஸ்வத்தாமன் என தெரியவந்தது. பட்டதாரி வாலிபரான இவர் கல்லூரியில் படிக்கும்போதே என்சிசி இல் இருந்துள்ளார். தற்போது அவர் மனநலம் பாதித்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையம் வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரணையில் அசுவத்தமனையும் அவர் வைத்திருந்த நான்கு ஏர் கன் மற்றும் 4 செல்போன்களுடன் பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் மனநலம் பாதித்தவர் என தெரிய வந்ததை அடுத்து அஸ்வத்தாமனின் தந்தை பாஸ்கரனை வரவழைத்து போலீசார் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications