10 காசுகூட எடுக்க மாட்டான்.. என் பையன் அனுபவித்த சித்ரவதை.. அஜித் குமார் தாய் ஆதங்கம்!
சிவகங்கை: காரில் 9 சவரன் நகை இருப்பது தெரிந்தும் எப்படி சாவியை நிகிதா கொடுத்தார் என்று போலீசார் தாக்குதலால் உயிரிழந்த அஜித் குமாரின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார். தனது மகன் 10 காடு கூட வீட்டில் எடுக்க மாட்டான் என்று கூறிய அவர், காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் வைத்து விசாரணை நடத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
காவல்துறையினரின் சித்ரவதை காரணமாக திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். மடப்புரம் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமாரிடம், சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் காரினை பார்க்க செய்ய கூறியுள்ளனர். அஜித் குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், இன்னொரு நபரின் உதவியுடன் காரினை பார்க் செய்துவிட்டு சாவியை கொடுத்துள்ளார்.

அஜித் குமார் மரணம்
இந்த சூழலில் காரில் இருந்த 9 சவரன் தங்க நகையை காணவில்லை என்று அஜித் குமாரிடம் கேட்டுள்ளனர். தனக்கு எதுவும் தெரியாது என்று அஜித் குமார் கூறிவிட்ட நிலையில், உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அஜித் குமாரை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை தாங்க முடியாத அஜித் குமார் உயிரிழந்தார்.
நீதி விசாரணை
அதுமட்டுமல்லாமல் நகையை காணவில்லை என்று கூறிய நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் மீது ரூ.16 லட்சம் பண மோசடி புகார் ஏற்கனவே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் புகாரின் உண்மைதன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிபதியின் நீதி விசாரணையில் இன்று அஜித் குமாரின் தாய் மற்றும் சகோதரர் நவீன் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அஜித் குமார் தாய் பேட்டி
இந்த நிலையில் தனது மகன் குறித்து அஜித் குமாரின் தாய் பேசுகையில், என் பையன் 10 காசு கூட எடுக்க மாட்டான். ஆனால் எப்படி 9 சவரன் நகை காருக்குள் இருக்கிறது என்பது தெரிந்தே காரின் சாவியை என் மகளிடம் நிகிதா கொடுத்தார்? ஒரு அரை பவுன் நகையை கூட அவ்வளவு பாதுகாப்பாக வைத்து கொள்வோம். ஒரு கட்டத்தில் புகார் அளித்திருந்தாலும், இருவரையும் வைத்து தானே போலீஸ் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.
நிகிதா விசாரணைக்கு வரவில்லை
நிகிதாவிடம் நகை இருந்ததா என்பதையும் போலீஸ் கேட்டிருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் எந்த விசாரணையும் நடத்தால் என் மகன்தான் நகையை எடுத்திருப்பான் என்று முத்திரை குத்தி அழைத்து சென்றிருக்கிறார்கள். அதேபோல் நிகிதா விசாரணைக்கு செல்லவே இல்லை. இதுவரை நிகிதா என்ன செய்கிறார் என்று கூட தெரியவில்லை. என் மகனின் உயிர் தான் போயிருக்கிறது. சித்ரவதை அனுபவித்து உயிரிழந்துள்ளான்.
கோரிக்கை
நிகிதா நகையை காரில் வைத்திருப்பார் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. 9 நகை காணாமல் போனால், பதறிக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து கேட்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நிகிதா செய்யவில்லை. அதனால் என் மகன் அனுபவித்த சித்ரவதைக்கு நிகிதா பதில் சொல்ல வேண்டும். சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications