கண்ணை கட்டி இரும்பு கம்பியால் காலை முறித்தனர்.. இறப்பதற்கு முன்பு ஆகாஷ் கொடுத்த பகீர் வாக்குமூலம்
மதுரை: மானாமதுரையில் போலீஸ் காவலில் காயமடைந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று விசாரணையின் போது, ஆகாஷ் உயிரிழக்கும் முன்பு கொடுத்த வாக்குமூலம் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் போலீசார் தான் இரும்பு கம்பியால் காலில் அடித்து முறித்ததாக அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ். 23 வயதான ஆகாஷை சமீபத்தில் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததாகவும், இதில் அவரது கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, 7-ஆம் தேதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள நான்கு வழிச்சாலையில் ஏராளமானவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஆகாஷ் இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்து, உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகாஷ் கைது செய்யப்பட்ட பிறகு மானாமதுரை மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதாகவும், அதன்பிறகு நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான அறிக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், காவல்துறையினர் தான், காலை உடைத்தனர் என்றும், கீழே விழுந்ததாக சொல்ல வேண்டும் என்று போலீசார் மிரட்டியதாகவும், அதனால் தான் வாக்குமூலம் கொடுத்தேன் என்று ரிமாண்ட் ரிப்போர்ட்டில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- குணா என்ற பையனுடன் நான் இருந்த போது மப்டியில் இருந்த போலீசார் கூப்பிட்டு சென்றார்கள். கண்களில் வெள்ளைத் துணியை கட்டிக்கொண்டு என்னை மட்டும் தனியாக 4 போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வெள்ளைத் துணியால் என்னுடைய கண்களை கட்டினர்.
ஓரிடத்தில் வைத்து எனது கெண்டைக்காலுக்கும் இரண்டு முட்டிக்கும் இடையில் இரண்டு கற்களை வைத்தனர். ஈரமான சாக்கை வைத்து சுற்றினர். பின்னர் இரும்புக் கம்பியால் காலில் பலமாக ஒருமுறை அடித்தனர்.
இதில் என்னுடைய வலது கால் எலும்பு முறிந்து ரத்தம் வழிந்தது. அடித்தவுடன் நான் வலியால் துடித்தேன். யார் என்னுடைய காலில் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. பின்னர் என்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது என்று தான் கூற வேண்டும் என போலீசார் மிரட்டினர். போலீசார் என்னை துன்புறுத்துவார்கள் என்ற அச்சத்தில் அவ்வாறு நான் கூறிவிட்டேன். யார் என்னை அடித்தார்கள் என்று தெரியாது என ஆகாஷ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு வருகிற 18ஆம் தேதி வரை சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications