அலங்காநல்லூரில் கடைசி வரை விறுவிறுப்பு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்... கார் பரிசு
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறி வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கி முதலிடம் பிடித்துள்ளார் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக். 18 காளைகளின் திமில் பிடித்து தழுவிய கார்த்திக்கிற்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமை 15ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இன்றைய தினம் காலை முதல் மாலை 6.30 மணி வரைக்கும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவது முனியாண்டி கோவில் சாமி கோவில் அவிழ்க்கப்பட்டது. இரண்டாவதாக அரியமலை கெங்கையம்மன் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.மூன்றாவதாக வலசை தாய் கிராம நொண்டி கருப்புசாமி கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.
இந்த போட்டியில் 1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தை பிடிக்க இரண்டு வீரர்களிடையே போட்டா போட்டி நிலவியது. கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அபிசித்தர் ஆகியோரிடையே கடும் போட்டா போட்டி நிலவியது.
மாலை 6.30 மணி வரை வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்க்கப்பட்டன. கருப்பயூரணியை சேர்ந்த கார்த்திக் என்ற வீரர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. அபி சித்தர் என்ற வீரர் 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். எம். குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 12 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 78 பேர் காயமடைந்தனர். விழா சிறப்பாக நடைபெற்றதாகவும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் அமைச்சர் மூர்த்தி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications