Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. மகன் இன்பநிதியுடன் வந்த உதயநிதி.. பாசத்துடன் உதயநிதி செய்த செயல்!
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அவரது மகன் இன்பநிதியும் கண்டுகளித்து வருகிறார்கள். போட்டி தொடங்கி வைக்கும் முன்பு, உதயநிதி, இன்பநிதிக்கு அமைச்சர் மூர்த்தி, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான லோகோவுடன் உடன் கூடிய அடையாள அட்டையை வழங்கினார். அதனை உதயநிதி தனது சட்டையில் இணைத்துக் கொண்டார். அப்போது இன்பநிதிக்கு பாசத்துடன் உதயநிதி செய்த செயல் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. அவனியாபுரம் ஜல்லிகட்டை பொறுத்தவரை 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 23) என்பவருக்கு முதல் பரிசாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது. டி.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 மாடுகளை அடக்கி 2-ம் பரிசாக இருசக்கர வாகனம் வென்றார்,. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த முரளிதரன் 14 காளைகளை அடக்கியதால் 3-ம் பரிசு பெற்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை நெருங்க விடாமல் அதிர வைத்த மலையாண்டி என்பவரது காளை முதல் பரிசுக்கு தேர்வு பெற்றது. இந்த காளை விகே சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து மலையாண்டிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது, 2-ம் இடம்பிடித்த காளையின் உரிமையாளர் கார்த்திக்கிற்கு இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டை பொறுத்தவரை சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜயதங்கபாண்டியன் என்பவரது காளைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது சிறந்த காளையாக சின்னப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது காளை தேர்வானது. அந்த காளையின் உரிமையாளருக்கு நாட்டுப்பசுவும், கன்றும் வழங்கப்பட்டது.
இதுபோல் பாலமேட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான பரிசுகளை பொறுத்தவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசுக்கான கார், அதிக காளைகள் அடக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது. அவர் 14 காளைகளை பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் என்பவர் 12 காளைகளை பிடித்து 2-ம் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 11 காளைகளை பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு மின்சார ஸ்கூட்டர் 3-வது பரிசாக வழங்கப்பட்டது.
இதனிடையே உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்து வருகிறது. போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி வைத்தார் இதற்காக நேற்று இரவே உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதியுடன் மதுரை வந்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் ஆயிரம் வீரர்கள் களம் இறங்கி உள்ளர்கள். சுமார் ஆயிரம் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போட்டியை பலர் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அவரது மகன் இன்பநிதியும் கண்டுகளித்து வருகிறார்கள். போட்டி தொடங்கி வைக்கும் முன்பு, உதயநிதி, இன்பநிதிக்கு அமைச்சர் மூர்த்தி, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான லோகோவுடன் உடன் கூடிய அட்டையயை வழங்கினார். அதனை உதயநிதி தனது சட்டையில் இணைத்துக் கொண்டார். இன்பநிதியுடன் கொடுத்த போது, அதை பற்றி அவர் கேட்டார். அப்போது உதயநிதி, இன்பநிதிக்கு அடையாள அட்டை பற்றி கூறியதுடன், அதனை சட்டையில் குத்திவிட்டார். அப்போது சிலர் வேகமாக வந்து ஜல்லிக்கட்டு நினைவு பரிசினை உதயநிதிக்கு வழங்கினார்கள். அதனை வாங்கி கொண்டார். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.















Click it and Unblock the Notifications