மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலை பள்ளியில், முன்னாள் மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு கோலாகலம்!
மதுரை: மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 1974 - 75 கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
நமது நாட்டில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்று தான் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி.. மதுரையில் உள்ள இப்பள்ளி பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்டது.

இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் பின்னாட்களில் தலைசிறந்த ஆளுமையாக மாறியுள்ளனர். விளையாட்டு துறையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய பள்ளியாக இது இருக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: இதற்கிடையே இந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 1974 - 75 ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நேற்று மே 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் Rev.Dr.R. ராஜா ஸ்டாலின் முன்னிலையில், தலைமை ஆசிரியை M. ஜேனோவா ஏவாஞ்சலின் தலைமையில் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டார்கள். தங்கள் பள்ளி காலத்து நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர்கள், பள்ளி காலத்தில் நடந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர் D. பால் கிறிஸ்டோபர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் S. சங்கரலிங்கம், V. ராதாகிருஷ்ணன், C. ரமேஷ், A.K.பஷீர் அஹமத் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications