மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்.. நாளை நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
மதுரை: மதுரையில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளைப் பகிர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நமது நாட்டில் அமைந்துள்ள பழமையான பள்ளிகளில் ஒன்று அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியாகும். மதுரையில் அமைந்துள்ள இந்த பள்ளி பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்டது.

அப்போது முதலே இந்தப் பள்ளியில் படித்த பல மாணவர்கள் பின்னாட்களில் தலைசிறந்த ஆளுமையாக உருவெடுத்துள்ளனர். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் இந்த பள்ளி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து வந்துள்ளது.
சந்திப்பு: இதற்கிடையே இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நாளை மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பள்ளியில் 1974- 1975ஆம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் படித்து முடித்து 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளியின் தாளாளர் ராஜா ஸ்டாலின், தலைமை ஆசிரியர் ஜேனோவா ஏவாஞ்சலின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இது மட்டுமின்றி 1974-75இல் ஆசிரியராக பணியாற்றிய பால் கிறிஸ்டோபர் என்பவரும் இதில் கலந்து கொள்கிறார்.

வேண்டுகோள்: இந்த நிகழ்வில் 1974- 1975இல் படித்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளைப் பகிர வேண்டும் எனப் பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்த அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியை பொதுவாக ஏசி பள்ளி என்று அழைப்பார்கள். இந்த பள்ளி பல திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளது. தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து ஆகியவற்றில் திறமையான பல வீரர்களை இந்த பள்ளி உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications