மதுரையில் ஒரே அதிசயம்.. புதருக்குள் "சுமங்கலி பெண்".. கையில் எலுமிச்சம்பழம் வேற.. வாவ் தென்னமநல்லூர்
மதுரை: மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த 7 கற்சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அந்த கற்சிற்பங்கள் எதை குறிக்கின்றன?
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ளது தென்னமநல்லூர் கிராமம்.. அகத்தாபட்டி இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இந்த தென்னம நல்லூர் கிராமம் அமைந்துள்ளது.. இந்த கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்சிற்பங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆச்சரியம்: சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் தென்னமநல்லூர் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர்..
இந்த ஆய்வில்தான், கி.பி 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டது. முட்புதர் பகுதியில், அதுவும் ஒரே இடத்தில் சுமார் 400 வருட பழமையான ஏழு கற்சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் சொன்னதாவது:
மதுரை நாயக்கர்கள்: "மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்த பகுதியை தென்னவன் என்ற குறுநில மன்னர் ஆட்சி நிர்வாகம் செய்துள்ளார். அவரது பணியை பாராட்டி நாயக்கர் மன்னர், இந்த பகுதிக்கு தென்னவன் நாடு என்று பெயர்சூட்டி உள்ளார். காலப்போக்கில் இது தென்னம நல்லூர் என பெயர் மருவியது..
இறந்துபோன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்த பின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் "சதிக்கல்" என்று அழைக்கப்படுகிறது.. இதில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலங்கள் அணிந்தவளாகவும் காணப்படுவாள்.
ஆனால், தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பார். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு. இத்தகைய சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று பலவாறாக அழைப்பர். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு.
நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கைம்பெண்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்தன. ஆனால் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கினர். கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.
முட்புதரில்: இப்போது, ஊரின் கிழக்கு பகுதியில் நீரோடையில் அருகே முட்புதரில் புதைந்து காணப்படுகிறது.. இந்த சதிக்கல்கள் 3 அடி உயரம், 1 ½ அடி அகலமும் கொண்டவை. கற்சிலை மேல் கூடாரம் அமைப்பு சாய்வாகவும், முக்கோண வடிவமாகவும், வட்ட வடிவமாகவும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன.

மொத்தம் ஏழு சதிக்கல் இருக்கிறது. பொதுவாக இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் சிற்ப வடிவத்தில் ஆணின் உருவம் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடக்கி வீரன் என்பதற்காக வலது கையில் வாள் கத்தி போன்ற பொறிக்கப்பட்டுள்ளது.
ஆணின் சிற்பங்கள்: ஆணின் சிற்பத்தின் அருகில் பெண் சிற்பம் அமைந்துள்ளது. பெண் சிற்பம் இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கியும், தனது வலது கையில் எலுமிச்சம் பழத்தை மடக்கிப் பிடித்து இருந்தால் அந்தப் பெண் சுமங்கலி என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார் முனைவர் முனீஸ்வரன்.


Click it and Unblock the Notifications
