Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகும் அமமுக

Subscribe to Oneindia Tamil

மதுரை: உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடியில் இந்த முறை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் வலுவான வாக்குககளை வாங்ககூடும் என்று சொல்லப்படுவதால் வெற்றி கணக்கைஅமமுக இங்கு தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அமமுக. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பலத்த அடி ஏற்பட அமமுக பிரித்த வாக்குகள் காரணம் என்றால் அது மிகையல்ல.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றியை தீர்மானித்தது அமமுக என்பது மறுக்க முடியாத உண்மை. உண்மையில் அமமுகவின் வாக்குகள் ஒருவேளை கடந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு போயிருந்தால் ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டிருக்கும். அந்த அளவிற்கு 22 தொகுதியிலும் வாக்குகளை வாங்கியிருந்தது.

அமமுக வாக்குகள்

அமமுக வாக்குகள்

குறிப்பாக சொல்வெதன்னால் பெரியகுளம், ஆண்டிபட்டி, திருப்பரங்குன்றத்தில் அஇஅதிமுக தோல்வி அடைய அமமுக முக்கியமான காரணம். திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன்,31199
வாக்குகள் பெற்றிருந்தார். அஇஅதிமுக வேட்பாளர் முனியாண்டி 83038 வாக்குகள் பெற்றிருந்தார். அதேநேரம் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சரணவன் 85434 வாக்குகள் பெற்றிருந்தார். சுமார் 1500 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று அஇஅதிமுக தோல்வியை தழுவியது. அமமுகவின் வாக்குகளில் பாதி அதிமுகவிற்கு விழுந்தாலும் பெரிய வெற்றி அதிமுக திருப்பரங்குன்றத்தில் பதிவு செய்திருக்கும்.

சமுதாய வாக்குகள்

சமுதாய வாக்குகள்

அடுத்ததாக ஆண்டிபட்டி தொகுதியை எடுத்துக்கொண்டால், இங்கு டிடிவி தினகரன் நிற்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கோவில்பட்டியில் நிற்கிறார். ஆண்டிபட்டியில் ஒருவேளை டிடிவி தினகரன் நின்றிருந்தால் நிச்சயம் அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக இன்று வரை பேசப்படுகிறது. இதற்கு காரணம் சமுதாய வாக்குகள் மற்றும் அவர் இங்கு ஏற்கனவே நன்கு பிரலம் என்பதுதான். ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த முறை திமுகவின் மகாராஜன் 87079 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக அதிமுகவின் லோகிராஜன் 74756 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அமமுகவின் ஜெயக்குமார் இங்கு 28313 வாக்குகள் வாங்கியிருந்தார், இந்த வாக்குகள் அதிமுகவிற்கு விழுந்திருந்தால் அதிமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருக்கும்.

கதிர்காமு

கதிர்காமு

அடுத்தாக பெரியகுளத்தை எடுத்துக்கொண்டால் இங்கு திமுகவின் சரவணகுமார் 88393 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அஇஅதிமுக வலுவான வேட்பாளரை அப்போது களம் இறக்கவில்லை. இப்போது பெரியகுளத்திற்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முருகன் தான் அப்போதும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் போட்டியிட மறுத்ததால், மயில்வேல் என்பதை அதிமுக களம் இறக்கியது. அவர் 68073வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அமமுகவின் கதிர்காமு இங்கு 26338 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் பெரியகுளத்தில் அதிமுக தோற்க அமமுக காரணமாக இருந்தது.

மகேந்திரன்

மகேந்திரன்

உசிலம்பட்டி, போடியில் தேவர் சமுதயாக வாக்குகள் அதிகமாக உள்ளது. உசிலம்பட்டியில் மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொகுதியில் தீவிரமாக வேலை செய்து வருகிறார். இங்கு திமுக,அஇஅதிமுக இரண்டு கட்சிகளுமே வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியதிருக்கும். ஏனெனில் மகேந்திரன் கடுமையான சவாலை தர வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு என்பது அதிமுக, திமுக, அமமுக மூன்றுக்குமே சம அளவில் உள்ளதால் பரபரப்பு காணப்படுகிறது.

முத்துச்சாமி

முத்துச்சாமி

போடியை பொறுத்தவரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். அ.ம.மு.க. சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். இவர்கள் 3 பேருமே அ.தி.மு.க.வில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள். தற்போது எதிர் எதிர் துருவங்களில் களத்தில் இருக்கிறார்கள். இங்கும் வாக்குகள் கணிசமாக பிரியும் என்பதால் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக உள்ளது,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+