'ஓசியில் பைக் சர்வீஸ்'.. திண்டுக்கல் மெக்கானிக்கை தாக்கிய எஸ்ஐக்கு மறக்க முடியாத பரிசு
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அண்ணாதுரை என்பவர் வாடிப்பட்டியில் பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ள திண்டுக்கலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்குமாறு கூறினார். ஆனால் மெக்கானிக் சீனிவாசன் போனை எடுத்து பேசாததால், அவரை சப் இன்ஸ்பெக்டர் தாக்கினார்.. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக அண்ணாத்துரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வாடிப்பட்டியில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்துள்ள திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த சீனிவாசன் (வயது 31) என்பவரிடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கச்சொல்லி கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அண்ணாதுரை போன் செய்தும் அதனை மெக்கானிக் சீனிவாசன் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வாடிப்பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்க்கு வந்து மெக்கானிக் சீனிவாசன் மற்றும் கடை ஊழியரை கன்னத்தில் அறைந்து தாக்கியிருந்தார்.. இது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதனையடுத்து மெக்கானிக் சீனிவாசன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் புகார் அளித்தார். அதில், "வாடிப்பட்டியில் பணியில் இருந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஏற்கனவே வாகனம் பழுதுபார்த்த வகையில் ரூ.8,600 பாக்கி வைத்திருக்கிறார்.
தற்போது மீண்டும் பணம் ஏதும் தராமல் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கச் சொல்லி மிரட்டினார். போலீஸ்காரர் ஒருவருடன் வந்து கடை ஊழியரையும் தாக்கி கஞ்சா உள்ளிட்ட திருட்டு வழக்குகளை பதிவு செய்வதாகவும் என்னை மிரட்டினார்" என அதில் தெரிவித்துள்ளார். இதனிடையே சீனிவாசனை அண்ணாதுரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications