Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடாத தமிழக போலீஸ்! மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு! பரபரப்பு -முற்றும் மோதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் சோதனையின்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு இருந்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கூறியுள்ளார்.

Ankit Tiwari Case: Madurai Police filled FIR against Enforcement Directorat officers for obstructing the raid

மேலும் விசாரணையை நடத்தாமல் இருக்க ரூ.3 கோடி லஞ்சம் கேட்டார். இதனை கொடுக்க சுரேஷ் பாபு மறுத்தார். இதையடுத்து ரூ.51 லட்சமாக லஞ்சப்பணம் குறைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் அங்கித் திவாரியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து 2வது கட்டமாக கடந்த 1ம் தேதி அங்கித் திவாரி ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபுவிடம் வாங்கினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி.. ஜாமீன் தள்ளுபடி? உயர்நீதிமன்றம் தீர்ப்பு


முன்னதாக அங்கித் திவாரி பணியாற்றி வரும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடாமல் சோதனையிட்டனர். விடியவிடிய 15 மணிநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த அமலாக்கத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை திமுகவின் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேபோல் அமலாக்கத்துறையில் நுழைந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டதை பாஜகவினர் கண்டித்தனர். இதனால் இது விவாதமானது.

வசமாய் சிக்கிய ED அதிகாரி அங்கித் திவாரி.. 3 லேப்டாப்கள் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

இந்நிலையில் தான் மதுரை தல்லாகுளம் போலீசார் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஎஸ்பி சார்பில் மதுரை தல்லாகுளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நாளிலேயே தமிழக போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் இடையே மோதல் போக்கு என்பது இருந்தது. இந்நிலையில் தான் தற்போது சோதனையின்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறையினர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த மோதல் என்பது இன்னும் முற்றலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+