மதுரையில் ’மங்காத்தா’ பாணி..2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்! ரவுடியுடன் கூட்டு சேர்ந்த ’மாஜி’ போலீஸ்
மதுரை: 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மதுரை மாநகர் S.S.காலனி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தலில் ஈடுபட்ட கடத்தல் கும்பலை சேர்ந்த நெல்லை ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல்காதர், தென்காசி சிவகிரி பகுதியில் உள்ள வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது, காவல்துறையில் பணிபுரிந்து டிஸ்மிஸ் ஆன முன்னாள் காவலர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மைதிலி ராஜலட்சுமி தம்பதியரின் மகன், கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராஜ்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் கடன் தொல்லையால் மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, மைதிலி ராஜலட்சுமி தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மைதிலி ராஜலட்சுமியின் மகனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சிறுவன் பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுநருடன் வீட்டிலிருந்து சென்றான். அப்போது ஆட்டோவை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஆம்னி வேனில் ஆட்டோவை இடித்து தள்ளியது. மேலும் ஆட்டோ ஓட்டுனரையும் பள்ளி மாணவனையும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் கண்களை கட்டி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை அருகே அந்த கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் மூலமாக கடத்தப்பட்ட சிறுவனின் தாயாரும் ராஜ்குமாரின் மனைவியும் ஆன மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து தாங்கள் சிறுவனை கடத்தி உள்ளதாகவும், 5 கோடி ரூபாய் முதற்கட்டமாக கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வீடியோ கால் மூலம் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை காட்டி பேரம் பேசி இறுதியில் இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், பணத்தை தரவில்லை என்றால் ஆட்டோ ஓட்டுனரை தாக்கியது போல, சிறுவனை வெட்டி வீசி விடுவோம் என கடத்தல் கும்பல் பேசிய ஆடியோ வெளியாகி பலத்த அதிகாலைகளை ஏற்படுத்தியது. மேலும் போலீசில் புகார் அளித்தால் சிறுவனை கொலை செய்து விடுவோம் ஏதாவது ஒரு சாலையில் நான்கு நாட்களுக்கு பிறகு சிறுவனின் சடலம் தான் கிடைக்கும் என மிரட்டி உள்ளனர். இதை அடுத்து அந்த ஆடியோவுடன் மைதிலி ராஜலட்சுமி இதுகுறித்து எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் எண்ணை வைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் தங்களை தொடர்வதை உணர்ந்த கடத்தல் கும்பல் சிறுவனையும் ஆட்டோ ஓட்டுனரையும் செக்கானூரணி அருகே காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டு தப்பினர். இதை அடுத்து பொதுமக்கள் அவர்களை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மைதிலியின் கணவர் ராஜ்குமார் பெண் ஒருவரிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வணிக வளாகம் வாங்கியதாகவும் அந்த பணத்தை திருப்பி தராததால், கடன் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கபப்ட்ட பெண் பணத்தை பெறுவதற்காக காவல்துறையில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்குமார் என்பவரை அனுகியுள்ளார்.
காவல்துறையில் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்குமார் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவருடன் சேர்ந்த இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட செந்தில்குமாரை கைது செய்த போலீசார் அவர் மூலமாக மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு திட்டமிட்ட பெண்ணையும் தேடி வருகின்றனர். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியிருக்கிறது. கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட காவலரை கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications