அதிமுகவின் கோட்டைக்கு குறி.. மதுரை மேற்கில் செல்லூர் ராஜுவை எதிர்த்து நிற்கும் தவெக தலைவர் விஜய்?
மதுரை: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இம்முறை திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. நடிகர் விஜய்-க்கு இருக்கும் செல்வாக்கு, இளைஞர்களின் ஆதரவு, திமுக மற்றும் அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லும் என்று பார்க்கப்படுகிறது.
இளம் வாக்காளர்களை கவரும் தலைவராக விஜய் இருப்பதால், முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளும் தவெகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப விக்கிரவாண்டி மாநாடு தொடங்கி கோவை பூத் கமிட்டி மாநாடு வரை தவெகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஆனால் 234 தொகுதிகளிலும் இது சாத்தியமா என்பதே மக்களின் மனதில் உள்ள கேள்வி.

விஜய் எங்கு போட்டி?
ஏனென்றால் தேர்தல் நெருங்கும் போது திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் களப்பணிக்கு தவெக-வால் ஈடு கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனாலும் தவெக தலைவர் விஜய் கட்டாயம் வெல்வார் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் களமிறங்க போகும் தொகுதி எது என்ற கேள்வி மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
போஸ்டரால் எழுந்த விவாதம்
இந்த நிலையில் மதுரையில் தவெக தலைவர் விஜய் போட்டியிட போவதாக தவெக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி இருப்பது விவாதத்தை கிளப்பி இருக்கிறது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தவெக தலைவர் விஜய் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
அதிமுகவின் கோட்டை
தமிழ்நாடு அரசியலில் மதுரை மாவட்டத்தில் வெற்றிபெறுவது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மதுரையில் அதிக தொகுதிகளில் வென்ற கட்சியே ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல் 1980ல் எம்ஜிஆர் போட்டியிட்டு வென்ற தொகுதி மதுரை மேற்கு தான். 2001ஆம் ஆண்டுக்கு பின் மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது.
எம்ஜிஆர் போட்டியிட்ட தொகுதி
அரசியலுக்கு வந்த பின்னரும் விஜய், எம்ஜிஆரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறார். சினிமாவிலும் எம்ஜிஆர் ரசிகராக விஜய் அதிகமாக நடித்துள்ள நிலையில், அரசியலிலும் எம்ஜிஆரை பின்பற்றுவாரோ என்ற விவாதம் அதிகரித்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் செல்லூர் ராஜு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
முக்குலத்தோர் வாக்குகள்
இம்முறை திமுக தரப்பில் மதுரை மேற்கு தொகுதி அமைச்சர் மூர்த்தியின் பொறுப்பில் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் அதிகளவில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் உள்ளன. அதேபோல் செளராஷ்டிரா மொழி பேசும் மக்களும் இருக்கின்றனர். இதனால் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டால், திமுக மற்றும் அதிமுகவுக்கு கடுமையான போட்டியாக இருக்கும்.
ஆதரவு இருக்குமா?
ஏற்கனவே மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்த போதே மிகப்பெரிய வரவேற்பு அக்கட்சியினரால் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையை போல் தங்களின் மாவட்டத்திற்கு அரசியல் கட்சியினர் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. இதனால் மதுரையில் விஜய் போட்டியிட்டால் மதுரை மேற்கு தொகுதியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
-
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க!












Click it and Unblock the Notifications