மதுரையில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் குவாரி குத்தகை உரிமம் ஏலம்.. வெளியான முக்கிய அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் 11 ஆண்டுகளுக்கு பின் கிரானைட் குவாரிகளை ஏலமிட முடிவு செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதற்கான ஏல அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் முறைப்படி வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில், விதிகளை மீறி கிரானைட் எடுத்ததாக புகார் எழுந்தது. மேலும் இப்படி விதிகளை மீறி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன்பின்னர் பிஆர்பி உள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்களின் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தற்போதும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் காரணமாக மதுரை மாவட்டததில் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012 செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில், விதிகளை மீறி கிரானைட் எடுத்தாக புகார் எழுந்தது. மேலும் இப்படி விதிகளை மீறி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகளை நடத்த மதுரை மாவட்ட நிர்வாகம் ஏல அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் 175 கல்குவாரிகள் உள்ளன. இதில் 70 குவாரிகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்நிலையில் மதுரை கிழக்கு, மேலுார் தாலுகாக்களில் உள்ள சில குவாரிகளை டெண்டர் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு குவாரி உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த அறிவிப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது:" மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான டெண்டர் விண்ணப்பங்கள் 30.10.2023 அன்று மாலை 04.00 மணி வரை தமிழக அரசின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரால் வரவேற்கப்படுகிறது.
31.10.2023 அன்று காலை 11.00 மணி முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டு டெண்டர் விண்ணப்பங்களை பிரித்து பரிசீலனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாதிரி விண்ணப்பப்படிவம், டெண்டர் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றின் விவரம் கடந்த அக்டோபர் 3-ம் தேதி வெளியான மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.04-ல் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.
பல வண்ண கிரானைட் குவாரி டெண்டருடன் இணைந்த பொது ஏலம் தொடர்பான விவரங்களுக்கு 'மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்', கூடுதல் கட்டிடம், 3-வது தளத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிரானைட் குவாரிகளை ஏலம் எடுப்போர் விதிமுறை மீறி செயல்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்றும். குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுவிடக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications