அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்கு தண்ணி காட்டிய சசிகலா காளை முதலிடம்..டிராக்டர் பரிசு
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் விகே சசிகலாவின் காளை முதல் பரிசை தட்டி சென்றது. இதற்காக ரூ. 10 லட்சம் கொண்ட டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் திருப்பரங்குன்றம் கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 19 காளைகளை அடக்கி ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக பெற்றார். இதேபோன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மாடும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாடும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 7.00 மணிக்கு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக போட்டி விறுவிறுப்புடன் நடந்தது. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நிறைவடைந்தது. திமிறியபடி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசாக அளிக்கப்படும் என்றும், சிறந்த பிடிபடாத மாட்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்ததும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மொத்தம் 19 காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர் திருப்பறங்குன்றம் கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா முதல் பரிசாக 8 லட்சம் மதிப்பு கொண்ட காரை பரிசாக அளித்தனர். மேலும் ஒரு பசுவையும் அவருக்கு பரிசாக வழங்கினர். இதேபோன்று இரண்டாம் இடம் பிடித்த குன்னத்தூர் அரவிந்த் திவாகருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி முரளிதரன் என்பவர் 3வது இடமும் பெற்றார்.

சசிகலாவின் காளைக்கு முதல் பரிசு
இதேபோன்று களத்தில் எந்த வீரரையும் நெருங்க விடாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாடாக சசிகலாவின் மாடு முதல் பரிசை தட்டி சென்றது. சசிகலாவின் மாடு பராமரிப்பாளர் மலையாண்டியிடம் இதற்கான முதல் பரிசான டிராக்டர் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் அவருக்கு ஒரு பசுவும் ஒரு கன்றுக்குட்டியும் பரிசாக வழங்கப்பட்டது.
சசிகலாவின் காளை மாடுபிடி வீரர்கள் யாரையும் கிட்டே வர விடாதபடி வாடிவாசலில் திமிறி எழுந்தது. நீண்ட நேரம் போராடியும் ஒரு வீரர்களாலும் இந்த காளையை அடக்க முடியவில்லை. இது குறித்து மலையாண்டி கூறுகையில், "ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. அம்மாவின் காளை முதல் பரிசு பெற்றிருக்கு.. அதிமுக பொதுச்செயலாளர் சின்ன அம்மாவுக்கு இந்த ஆண்டில் கிடைச்ச முதல் வெற்றி. வெற்றி பெற்றது என்னுடைய மாடு இல்லை. விகே சசிகலாவின் மாடு தான். 8 வருஷமாக நான் தான் வளர்த்து வருகிறேன்.
இந்த மாடு முதல் முறையாக இப்போது தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளது. இயற்கையான தீவனங்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அரசியல் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காளையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் பரிசு அறிவிக்கும் போது அம்மாவின் காளை என்று அவர்கள் சொல்லவில்லை" என்று மகிழ்ச்சியுடன் கூறினார். முன்னதாக மாடுக்கு டிராக்டர் பரிசை அறிவித்த போது, மலையாண்டி மாடு என்று கூறப்பட்டது. இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் இது மலையாண்டி மாடு கிடையாது.. அதிமுக பொதுச்செயலாளர் மாடு என்று கூறினர்.

டிடிவி தினகரனின் மாடும் வெற்றி
இதேபோன்று இன்று நடந்த அவனியாபுர ஜல்லிக்கட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சொந்த மாடும் பங்கேற்றது. டிடிவி தினகரனின் மாடு என்று சொல்லி வாடிவாசலில் விடப்பட்டது. காளையை பிடிக்க மாடு பிடி வீரர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், யாரிடமும் பிடிபடாமல் திமிறிக்கொண்டு கெத்தாக ஓடியது. பிடிக்க வந்த ஒருவரையும் உதறிவிட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்தது. இந்த காளையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர் பி உதயகுமாரின் மாடும் வெற்றி
இதேபோன்று முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மாடும் பிடிமாடு ஆகாமல் வெற்றி பெற்றது. வீரர்களை நெருங்க விடாமல், வாடிவாசலில் சீறிப்பாய்ந்து சென்றது.
ஆர்பி உதயகுமாரின் செல்லத்தம்பி கருப்பு மாடு வாடிவாசலில் இறங்கியபோது, மூன்று முதல் ஐந்து பேர் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்தனர். ஆனால் யாரையும் ஒரு செகண்ட் கூட தொடவிடாமல் காளை வெற்றி பெற்றது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications