மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 6 வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை

மதுரையில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த 6ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரையில் ஜனவரி 6 வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.. எனினும் பலர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி சென்று வருகின்றனர்.

சில தினங்களாக, இந்த தொற்றானது, மருத்துவ கல்லூரி மாணவர்களையும் பீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

Ban for rally and meetings in Madurai district till January 6

மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.. இதனையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிறகு, மேலும் ஒரு மாணவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாகக் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.. அதில், மீண்டும் ஒரு மாணவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்!கொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்!

பாதிக்கப்பட்ட நபரும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனை சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுரையில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பிறப்பித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை மாவட்டத்தில் ஜனவரி 6 வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை பெற 5 நாட்களுக்கு முன்பே முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு முறையாக விண்ணப்பிக்க தவறினால் அனுமதி நிராகரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Ban for rally and meetings in Madurai district till January 6
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X