கடனை செலுத்திய பிறகும் அடமான ஆவணங்களை கொடுக்காத வங்கி மேலாளருக்கு அபராதம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடன் தொகையினை முழுவதுமாக செலுத்திய பிறகும், அடமான ஆவணங்களை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வங்கிக்கு மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஏழை, எளிய மக்களை வங்கிகள் துன்புறத்தக் கூடாது என்றும், அவ்வாறு செயல்பட்ட குறிப்பிட்ட வங்கி மேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மாரித்துரை. இவர் மரக்கடை தொழில் செய்ய விரும்பினார். இதற்காக மாரித்துரை தனியார் வங்கியில் ரூ.39 லட்சம் கடனாக வாங்கியிருக்கிறார். அதை கட்ட முடியாததால், வங்கி அவரது சொத்துக்களை ஜப்தி செய்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் பணம் முழுவதையும் மாரிமுத்து வங்கியில் செலுத்தியபிறகும் ஜப்தி செய்த சொத்துக்களை கொடுக்கவில்லை.

Bank High Court Tenkasi

இது குறித்து மாரிமுத்து நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், கடன் தொகையினை முழுவதுமாக செலுத்திய பிறகும், அடமான ஆவணங்களை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வங்கிக்கு மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஏழை, எளிய மக்களை வங்கிகள் துன்புறத்தக் கூடாது என்றும், குறிப்பிட்ட வங்கி மேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சிவகிரியை சேர்ந்த மாரித்துரை மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- நான் மரக்கடை தொழில் செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் வங்கியில் ரூ.39,74,523 கடன் பெற்றேன். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக என்னால் முறையாக கடனை செலுத்த இயலவில்லை. பின்னர் கடனுக்காக நான் அடமானமாக கொடுத்த சொத்தினை ஜப்தி செய்ய போவதாக வங்கியில் இருந்து அறிவிப்பு வெளியானது.

எனவே இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கினை விசாரணை செய்த ஐகோர்ட், 4 தவணைகளில் முழு கடன் நிலுவை தொகையினையும் செலுத்தும்படி உத்தரவிட்டது. ஐகோர்ட் சொன்னபடியே விதித்த கெடுவுக்குள் மொத்தக் கடன் தொகையும் நான் செலுத்தி விட்டேன். தொடர்ந்து என் சொத்து அடமான ஆவணங்களை தருமாறு வங்கியில் கேட்டேன். ஆனால் அவர்கள் கூடுதலாக பணம் செலுத்தினால் தான் ஆவணங்களை வழங்கமுடியும் என்று கூறிவிட்டனர்.

தனியார் வங்கியின் இந்த செயலால் நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும் அவர்களது நடவடிக்கை கோர்ட் உத்தரவினை அவமதிக்கும் செயலாகும். எனவே என் அடமான சொத்துக்களை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று இந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவானது மதுரை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல்கள் நீலமேகம், தேவராஜ் மகேஷ் ஆகியோர் கோர்ட் உத்தரவின்படி மொத்த கடன் தொகையையும் உரிய காலத்திற்குள் மனுதாரர் செலுத்திவிட்டார். அப்போது கூடுதலாக ரூ.5 லட்சம் கொடுத்தால் மட்டுமே அடமான சொத்து ஆவணங்களை திருப்பி கொடுப்போம் என வங்கி அலுவலர்கள் மிரட்டியுள்ளனர். இந்நடவடிக்கை கோர்ட் உத்தரவை மீறுவது, அவமதிப்பதாகும் என்று கூறினர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், வங்கி அதிகாரிகள் கோர்ட் உத்தரவை அவமதித்து உள்ளனர். எனவே குறிப்பிட்ட வங்கியின் தலைமை மேலாளர் உடனடியாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர். இதன் பின்னர் மீண்டும் அதே நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் வங்கியின் மேலாளர் நேரில் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், "வரும் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு மனுதாரரின் வீட்டிற்கு நேரில் சென்று அடமானமாக பெற்ற அனைத்து ஆவணங்களையும், தடையில்லா சான்றையும் ஒப்படைக்க வேண்டும். சொத்தை வங்கியின் பேரில் பதிவு செய்ததை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை மேலாளர் எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

மேலும், வங்கிகள் ஏழை எளிய மக்களை துன்புறுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒருவரை பழி வாங்கும் நோக்கில் நடந்து கொண்டதற்காக குறிப்பிட்ட அந்த வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த தொகையை அன்றைய தினமே மனுதாரரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+