பிறப்பு சான்றிதழ் அவசியம்.. அதை விடுங்க, மரணத்திற்கு சான்று நிராகரிப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி
மதுரை: பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது என நிராகரித்த ஆர்டிஓவின் உத்தரவை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்ததுமே, பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டமாக உள்ளது.. இது ஏற்கனவே நடைமுறையிலும் இருக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப்பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப்பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

பிறப்பு இறப்பு சான்றிதழ்
பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது. 22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம், 30 நாட்களுக்கு மேல் ஒரு வருடத்துக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது.
இந்நிலையில் வழக்கு ஒன்றில், பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது என நிராகரித்த ஆர்டிஓவின் உத்தரவை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. என்ன வழக்கு நடந்தது?
இறப்பு சான்றிதழ்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகேயுள்ள கீழக்கோட்டையை சேர்ந்தவர் அர்ஜூனன்.. இவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 2005 ல் ஓய்வு பெற்றேன். என்னுடைய அப்பா ராமசாமி 1961ல் இறந்தார். அவருக்கு நான் உட்பட 6 பேர் சட்டப்பூர்வ வாரிசுகள். தந்தையின் மரணத்தின்போது நான் சிறுவனாக இருந்ததால் இறப்புச் சான்றிதழை உரிய நேரத்தில் பெறமுடியவில்லை.
எங்கள் குடும்பத்தினர் ஒரு கோயிலை நிறுவினார்கள்.. அந்த கோயிலுக்கான வருவாய்த்துறை ஆவணங்கள் மூதாதையர்களின் பெயர்களில் உள்ளன. வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்வதற்காக எனது தந்தையின் இறப்புச் சான்றிதழ பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சான்றிதழ் கோரி தேவகோட்டை ஆர்டிஓவிடம் 2019 ல் விண்ணப்பித்தேன்.
ஆர்டிஓ உத்தரவு தேவை
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் கொண்டுவருவதற்கு முன் தந்தை இறந்ததால், அதை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டது... அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000 ன்படி இறப்புச் சான்று வழங்க கலெக்டர், ஆர்டிஓவிற்கு உத்தரவிட வேண்டும்" என்று தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் நேற்றைய தினம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடும்போது, சட்டம் வருவதற்கு முன்பு இறந்த ஒருவருக்கு சட்டப்படி சான்றிதழ் வழங்க எந்தத் தடையும் இல்லை என்றனர்.
பிறகு அரசு தரப்பில் வாதிடும்போது, "இந்த சட்டம் தமிழகத்தில் 1970 ஏப்ரல் 1ல் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது" என்றனர்..
பிறப்பு, இறப்பு சான்றிதழ்
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "காலனித்துவ ஆட்சிக்கு முன்பு பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை. காலனித்துவவாதிகளால் பிறப்பு, இறப்புகளை தன்னார்வ அடிப்படையில் பதிவு செய்வதற்காக ஒரு சிவில் பதிவு முறை கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து 1886 ல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. இது 1888 அக்டோபர் 1ல் நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டமும் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவில்லை. இதன் நோக்கம் எந்தவொரு குறிப்பிட்ட சட்டத்திற்கும் உட்படாத கிராமப்புறங்களில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவதாகும். இறப்பு குறித்து பதிவாளருக்கு தெரிவிக்காவிடில் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தாலும், அது அரிதாகவே பின்பற்றப்பட்டது..
ரூ.500 தாமதக் கட்டணம்
பிறகு இந்தியா நாடு முழுவதும் நிலவிய பல்வேறு சட்டங்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 1969 ல் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தை கொண்டுவந்தது. ஒருவரின் இறப்பு குறித்து பதிவாளரிடம் தெரிவிப்பது, அனைத்து விபரங்களையும் வழங்குவது தற்போது கட்டாயமாகிவிட்டது. இந்த சட்டப்பிரிவின்படி 1886 சட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால் அந்த வீட்டின் தலைவரே பதிவாளரிடம் தகவல் அளிக்க அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இல்லாத நிலையில், அந்த காலகட்டத்தில் அங்கு வசிக்கும் மூத்த நபர் தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000ன்படி எந்தவொரு பிறப்பு அல்லது இறப்பையும் அது நடந்த ஒரு வருடத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஆர்டிஓ பதவிக்கு குறையாத குறையாத நிர்வாக நீதிபதியின் உத்தரவின் மூலம் ரூ.500 தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
நிராகரிக்கப்பட்ட உத்தரவு ரத்து
இந்த மனுதாரர் 1947 ல் பிறந்தார். அவரது தந்தை இறந்த 1961 ல் மனுதாரர் 14 வயது சிறுவனாக இருந்திருப்பார். மூத்த சகோதரர் தந்தையின் மரணத்தை பதிவு செய்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு செய்யவில்லை.
மனுதாரர் ஆசிரியராக பணிபுரிந்ததால் தந்தையின் மரணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஓய்வு பெற்ற பிறகு வருவாய் பதிவேடுகளை மாற்றியமைக்க வேண்டியிருந்ததால் இறப்புச் சான்றின் அவசியம் எழுந்தது. உடனடியாக, அவர் மனு செய்தார்.
அது 6 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் நிலுவையில் இருந்தது. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் கொண்டுவருவதற்கு முன் ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது எனக்கூறி, நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தாமத கட்டணமாக ரூ.500 ஐ மனுதாரர் செலுத்த வேண்டும். ஆர்டிஓ விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications