ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பால்.. ஃபோகஸை திருப்பிய பாஜக! திருப்பரங்குன்றம் வேண்டுமாம்? ஷாக்கான அதிமுக!
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த விவகாரத்தைத் தொடர்ந்து, மிகவும் பிரபலமான அந்த தொகுதியில் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்து வரும் ராஜன் செல்லப்பா, விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொகுதியாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் முருகனின் படைவீடுகளிலும் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில். முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு, இந்த தொகுதியும் கோயிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பிரச்சனைகளிலும் பாஜக தேசிய தலைமை நேரடியாகவே 'இது கந்தன் மலையா? சிக்கந்தர் மலையா?' என்று பேசியுள்ளது. இதனால் இந்த தொகுதி தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இந்த தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்பதைப் பார்ப்போம்.
இத்தொகுதி தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது, அண்ணா தலைமையிலான இரண்டாவது மாநாடும், கருணாநிதி தலைமையில் இரண்டாவது செயற்குழு, பொதுக்குழுவும் நடைபெற்றது.
எம்ஜிஆர் பொதுக் கூட்டம்
எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவின் முதல் பொதுக்கூட்டமும், விஜயகாந்த் தனது கட்சியை தொடங்கியதும் இத்தொகுதியில்தான். மதுரையின் அடையாளங்களான காமராஜர் பல்கலைக்கழகம், எல்காட் தொழில்பூங்கா, விமான நிலையம், நீண்டகாலமாக கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை அனைத்தும் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகைப்பூ உட்பட பல்வேறு பணப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பெறுவதில் விவசாயிகள் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியில் இருந்து மீட்க வாசனை திராவிய ஆலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தொகுதியில் பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக மாறி மாறி வெற்றி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன. அவற்றில் அதிமுக 8 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 2 முறை, மற்றும் தேமுதிக 1 முறை வெற்றி பெற்றுள்ளது.
முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது, மருத்துவமனையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தைப் பெற்றது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
தொகுதி நிலவரம்
திருப்பரங்குன்றம் தொகுதியில், முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். அடுத்தபடியாக சவுராஷ்டிரா, முத்தரையர், கோனார், ஆதி திராவிடர், கிறிஸ்தவர்கள், இதர சமூக மக்கள் வசிக்கின்றனர். இதில், முக்குலத்தோர் சுமார் 35%, சௌராஷ்டிரா மற்றும் முத்தரையர் தலா 15% என பெரும்பான்மையாக உள்ளனர். இச்சமூகங்கள் தொகுதியின் வெற்றி வாய்ப்பை பெருமளவில் தீர்மானிக்கின்றனர்.
இந்த தொகுதியை பலரும் குறிவைத்து பணியாற்றி வரும் நிலையில், சிலர் மட்டுமே முன்னிலைப் பெறுகின்றனர். குறிப்பாக, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகா தங்கபாண்டியன் குறிப்பிடத்தக்கவர். கடந்த தேர்தலில் இவரின் பெயர் பேசப்பட்டபோதிலும், கடைசி நேரத்தில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுத்தாய் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா நிறுத்தப்பட்டார்.
கிருத்திகா பாண்டியன்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கிருத்திகா பாண்டியன் வழங்கி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். மதுரையில் ஒரு ஐடி நிறுவனம் நடத்துகிறார். இவரின் கணவர் தங்கபாண்டியன், திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும், திமுகவின் ஏர்போர்ட் பாண்டியன், இளைஞரணியின் விமல் ஆகியோரும் இத்தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
டாக்டர் சரவணன்
அதிமுகவைப் பொறுத்தவரை, புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவே மீண்டும் களம் இறங்குவார் என கூறப்படுகிறது. 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தற்போது அதிமுகவில் உள்ள டாக்டர் சரவணனும், திருப்பரங்குன்றத்தில் மீண்டும் வெற்றி பெறுவார் என நம்பி தீவிரமாக பணியாற்றி வருகிறார். நேரடியாக எடப்பாடியிடமும் இத்தொகுதி வேண்டும் என டாக்டர் சரவணன் கோரிக்கை வைத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் தொகுதியை நோக்கி பாஜகவின் கவனம் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி தொகுதி எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் தொகுதியையும் பாஜக ஒரு அரசியல் அடையாளப் பகுதியாக பார்க்கிறது. இதனை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பெரிய போராட்டங்கள்
திருப்பரங்குன்றம் கோயிலை மையமாக வைத்து பெரிய போராட்டங்களை மேற்கொண்ட பாஜக, இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் இந்துக்களுக்கு திமுக எதிரான கட்சி என்ற தனது கதையாடலை வலுப்படுத்தலாம் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசனும் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.
திமுக நேரடி போட்டி
இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெறாத தொகுதிகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் இந்த தொகுதியும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவின் ராஜன் செல்லப்பா மீண்டும் களம் இறங்கினால், இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என உள்ளூர் கட்சியினர் கூறுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications