நீங்க ஏறி அடிக்க நினைச்சா நாங்களும் ஏறி அடிக்க தயார் - அமைச்சர் வார்னிங்கால் கொந்தளித்த எச்.ராஜா!
மதுரை : திமுக ஏறி அடிக்க நினைத்தால் நாங்களும் ஏறி அடிக்கத் தயார் என அமைச்சர் சேகர் பாபுவுக்கு பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பதில் அளித்துள்ளார்.
சேகர் பாபு தனது அமைச்சர் பதவிக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலைத்துறையை பா.ஜ.கவினரும், மதுரை ஆதீனமும் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பாஜக முன்னணி தலைவர் எச்.ராஜா சேகர் பாபுவை கடுமையாகச் சாடியுள்ளார்.

மதுரை ஆதீனம்
சமீபகாலமாக மதுரை ஆதீனம் திமுக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொடர்பாக மதுரை ஆதீனம் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தாலும், அதன்பிறகு தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், இந்து சமய அறநிலையத் துறையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதனால், மதுரை ஆதீனத்திற்கும், தமிழக அரசு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

சேகர் பாபு எச்சரிக்கை
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ளக்கூடாது எனத் தெரிவித்தார். மேலும், மதுரை ஆதீன விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் பதுங்குவதை பயமாக கருதக்கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதீனம் தனது அரசியல் பேச்சுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லயெனில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாஜகவினர் எதிர்ப்பு
அமைச்சர் சேகர் பாபுவின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உசிலம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, "தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக ஒரு மோசமான அரசு நடந்து கொண்டிருக்கிறது. தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச பிரச்சனையிலிருந்து இந்த அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளுக்கு எதிராக சில ரவுடிகளைப் போல நடந்து கொள்கின்றனர்.

மிரட்டும் பேச்சு
அறநிலையத்துறை அமைச்சரின் பேச்சு ஆதீனத்தை மிரட்டும் வகையில் உள்ளது. தூக்கி அடிப்பேன், சும்மா இருக்கேன்னு நினைக்காதீங்க, பதுங்குவது பாய்வதற்கு தான் என அவர் பேசும் பேச்சு அவரின் லட்சணத்தை காட்டுகிறது. அவர் எந்த லட்சணத்தில் இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடந்தார். ஆனால் இப்போது மதுரை ஆதீனத்துக்கு எதிராக பேசுகிறார்.

ஏறி அடிக்கத் தயார்
சேகர் பாபு அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அமைச்சர் சேகர் பாபு நாவடக்கத்தோடு பேச வேண்டும். அமைச்சர் சேகர் பாபுவின் வார்த்தைகள் தடித்தால், பா.ஜ.க களத்தில் இறங்கும். நீங்கள் ஏறி அடிக்க நினைத்தால் நாங்களும் ஏறி அடிக்கத் தயார்.

ஏரி இருக்கா?
இவர்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 100 கோவில்களுக்கு மேல் இடித்துள்ளனர். கேட்டால் அந்தக் கோவில்கள் நீர்நிலைகளில் உள்ளதாக கூறுகின்றனர். வள்ளுவர் கோட்டம் எதில் உள்ளது? வடக்கு மாம்பலத்தில் லேக் வியூ ரோடு உள்ளது. அதில் லேக் இருக்கிறதா? இந்த திராவிட இயக்கம் என்பதே தமிழை, தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்திற்கு ஆதரவாக உள்ள கோயில்களை அழிப்பதற்காக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications