பாஜக 300 இடங்களில் வெற்றி பெறும்… தமிழகம், புதுவையில் 40ம் கிடைக்கும்.. பியூஷ் கோயல் பலே பேச்சு
மதுரை: மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று கணக்கெடுப்பு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாங்கள் அதிமுக, பாமக, தேமுதிக, என மெகா கூட்டணி அமைத்து உள்ளோம் என்றார்.

பிரதமர் மோடி அவர்கள் வலிமையான பிரதமராக தற்போது பணியாற்றி வருகிறார். 300 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று தற்போது வந்த கணக்கெடுப்புகள் வருகிறது.நாட்டின் மீது அக்கறை கொண்டு உள்ளவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தலைவர்களும் நாட்டிற்கு பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர்.
எங்கள் கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தலைவர்களும், மத்தியில் மோடி அவர்களை மீண்டும் பிரதமராக்குவதற்கு உழைக்க காத்திருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் ஊழலற்ற பொருளாதார வளர்ச்சி, அதனால் தான் மாநில அரசுகளின் துணையோடு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தினோம். இதை காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்த முடியவில்லை அதனால் பொறாமைப்படுகிறார்கள்.
ராகுல் காந்திக்கு பொருளாதாரத்தை பற்றி சிறிதளவு ஞானம் இருக்கிறது. ஜிஎஸ்டி கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசுகிறார்கள். தற்போது ஜிஎஸ்டி குறித்து மன்மோகன் சிங் அவர்கள் பாராட்டியது வரவேற்கக் கூடியது. நாளை தொகுதிக்கான இறுதி பட்டியலை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications