மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரையில் டாக்டர்கள் சோதனை

சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு இன்று எச்ஐவி சோதனை நடைபெற்றது.

Google Oneindia Tamil News

மதுரை: சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செலுத்தியிருந்தார். இதற்கு பிறகு வெளிநாடு கிளம்புவதற்காக ஹெல்த் செக்கப் செய்ய மீண்டும் ஆஸ்பத்திரி சென்ற போதுதான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று, தன் உடல்நிலை குறித்து சொன்னார்.

இது சம்பந்தமான விசாரணையும் நடத்தப்பட்டதில், இளைஞரின் எச்ஐவி பாதித்த ரத்தம், கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது தெரியவந்தது. இந்த விஷயம் வெளியே தெரியவரவும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இவ்வளவு அலட்சியமாக ஒரு அரசு ஆஸ்பத்திரி இருக்குமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது.

இளைஞர் தற்கொலை

இளைஞர் தற்கொலை

உடனே இது சம்பந்தமாக விசாரணையும் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றாலும், அலட்சியமாக செயல்பட்ட சிவகாசி அரசு ஆஸ்பத்திரி, டாக்டர்கள், நர்சுகள் என எல்லார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று பரவ காரணமாக இருந்து விட்டோமே என்ற கவலை மற்றும் மன உளைச்சலில், பெண்ணுக்கு ரத்தம் தந்த இளைஞர், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலையே செய்து கொண்டார்.

45 நாட்கள்

45 நாட்கள்

பின்னர் கடந்த ஜனவரியில் எச்ஐவி பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கும் எச்ஐவி தொற்று பாதிப்பு இருக்குமா? என்பதை சோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்றும், 45 நாட்கள் ஆனால்தான் அந்த சோதனையை செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைக்கு எச்ஐவி தொற்று உள்ளதா? இல்லையா? என்று ரத்த பரிசோதனை நடைபெற்றது.

30 நாட்கள் ஆகும்

30 நாட்கள் ஆகும்

இதற்காக குழந்தையின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் தெரிய 30 நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இதுபோல குழந்தைக்கு 6 மாதம், 12 மாதம், மற்றும் 18 மாதம் ஆகிய இடைவெளிகளில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

குழந்தை நலம்

குழந்தை நலம்

அதனால் தாயும் குழந்தையும் அதுவரை தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பார்கள் என தெரிகிறது. இப்போதைக்கு குழந்தை நன்றாக இருக்கிறது என டாக்டர்கள் சொல்லுகிறார்கள். பிறந்த போது 1.7 கிலோ எடை இருந்ததாம். இப்போது 2.8 கிலோ எடை இருக்கிறதாம்.

உச்சகட்ட பரபரப்பு.. சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.. நேரடியாக </a><a class=களமிறங்க முடிவு! " title="உச்சகட்ட பரபரப்பு.. சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.. நேரடியாக களமிறங்க முடிவு! " />உச்சகட்ட பரபரப்பு.. சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.. நேரடியாக களமிறங்க முடிவு!

English summary
Medical Check up for HIV infected Sattur Woman's female baby in Madurai Govt Hosptial
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X