கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடைக்கானலைச் சேரந்த ஆரோக்கியசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரி அருகே குறிப்பிட்ட அளவு நிலத்தை படகு மற்றும் துடுப்பு கிளப் நிர்வாகத்துக்கு தமிழக அரசு குத்தகைக்கு அனுமதி அளித்தது.
ஆனால் காலக்கெடு 2019 செப்டம்பர் 1ம் தேதியே முடிந்துவிட்டது. ஆனால் அனுமதித்ததை விட கூடுதல் நிலத்தை சட்டவிரோதமாக தன் கட்டுப்பாட்டில் இந்த கிளப் வைத்துள்ளது. படகுகள் இயக்கம் மற்றும் கடைகள் வைத்து வணிக ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

படகுகளை இயக்க
கார்ல்டன் ஓட்டல் நிர்வாகம் அனுமதியின்றி படகுகளை இயக்குகிறது. இதனால் கொடைக்கானல் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கிளப் நிர்வாகத்திற்கு குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்கக்கூடாது. ஏரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தடை விதிக்கணும்
கொடைக்கானலில் கிளப் மற்றும் ஓட்டல் நிர்வாகம் படகுகள் இயக்க தடை விதிக்க வேண்டும். படகுகள் இயக்க விதிகள்படி பொது ஏல அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கலெக்டருக்கு நோட்டீஸ்
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கமிஷனர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.

படகு குழாமுக்கு சீல்
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு, கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications