சாக்கு மூட்டைக்குள் ரத்த வாடை..வெளியே விழுந்த கால்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..மதுரையில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே சாலையோரம் இருந்த சாக்கு முட்டையிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் சாக்கு முட்டையை சோதனை செய்தபோது அதில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பைபாஸ் சாலையில் ஈச்சனேரி பகுதி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை அந்த சாலையின் ஓரத்தில் ஒரு சாக்குமுட்டை கிடந்தது. சாக்கு முட்டையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் அருகே சென்று பார்த்தனர்.

madurai crime police

அப்போது அந்த மூட்டையில் இருந்து கால்கள் வெளியே தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து பெருங்குடி போலீசாருக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் ஆய்வாளர் சரவணன் மற்றும் பெருங்குடி காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த சாக்கு முட்டையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடைய அறிவியல் துறையினரும் காவல்துறை மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் உயிரிழந்த பெண் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

madurai crime police

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கும் அந்த பெண்ணின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை கொடூரமாக அடித்து கொலை செய்து உடலை சாக்கு முட்டையில் கட்டி கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் உடலைக் கொண்டு வந்து அங்கு போட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள டோல் பிளாசாக்கள் உள்ளிட்டவற்றிலும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மதுரையில் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் விவரங்களையும் சேகரித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக இந்த உடல் அங்கு வீசப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை அடுத்து அந்த நேரத்தில் அப்பகுதியை கடந்து சென்ற வாகனங்களின் தகவல்களையும் திரட்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ள போலீசார், பெண்ணின் விவரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக மதுரை மாவட்ட காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+