மருது சேனை நிறுவனர் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி.. மதுரை அருகே பெரும் பரபரப்பு!
மதுரை : மதுரை அருகே மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார் ஆதிநாராயணன்.

வரும் லோக்சபா தேர்தலில் மருது சேனை கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் மருது சேனை நிறுவனர் ஆதிநாராயணன்.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் உள்ள மருது சேனை அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆதிநாராயணன். =
அப்போது மைட்டான்பட்டிக்குள் நுழையும் பகுதியில் இவரது கார் சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியுள்ளது. காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசி உள்ளது. அந்த குண்டு அவரது காரின் மீது விழவில்லை.
ஆதிநாராயணன் காரை ஓட்டிய டிரைவர், உடனடியாக சாலை ஓரம் பள்ளத்தில் காரை இறக்கி, தப்பிக்க முயன்றார். ஆனாலும், அக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்றது. அப்போது காரின் முன் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர். கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இந்த கொலை முயற்சி சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருது சேனை அமைப்பினர் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கள்ளிக்குடி- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications