மதுரையில்.. தண்டவாளம் அருகே வெடித்துச் சிதறிய நாட்டு வெடிகுண்டு..!
Recommended Video

மதுரை: மதுரை மகாலட்சுமி நகர் ரயில்வே தண்டவாளம் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மகாலட்சுமி நகர் பின்புறம் மதுரை பழனி அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணியளவில் தண்டவாளத்தில் இருந்து 10 அடி தூரத்தில் பயங்கர வெடி ஒன்று வெடித்து சிதறியது.
ஆள் நடமாட்டம் கொண்ட அந்த பகுதியில் வெடித்து சிதறி அந்த வெளியிலிருந்து சிதறிய செங்கற்கள் அப் பகுதியில் நடமாடிக் கொண்டு இருந்தவர்கள் மற்றும் விறகு சேகரித்து கொண்டவர்களின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக மாறி அதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் திரண்டனர்.

போலீஸ் விரைந்தது
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மீட்பு குழுவினரும், மோப்ப நாய் சகிதமாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் திரட்டப்பட்ட பொருள்களின் அடிப்படையில் வெடித்தது வெடிபொருள் என்பது உறுதி செய்யப்பட்டது.

வெடி பொருள்
வெடித்த பொருள் 100 கிராம் எடை கொண்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது நிலையில், அது நாட்டு வெடிகுண்டு அல்லது வெடிகுண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் அங்கு போலீசாருடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டார்.

ஐஜி விசாரணை
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட வெடிபொருட்கள் குறித்து ஆய்வு நடத்தி அவர் அதன் பின்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,'கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். வெடிகுண்டு வெடித்த சம்பவமானது ரயில்வே தண்டவாளம் அருகே நடந்த சம்பவம் என்பதால் இந்த விசாரணையில் ரயில்வே போலீசாரும் இணைந்துள்ளனர்.

செல்லூர் ராஜு நிகழ்ச்சிக்கு அருகே
இதைத்தொடர்ந்து வெடிகுண்டு விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சரியாக 500 மீட்டர் தொலைவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக அமைக்கப்பட்ட மதுரையின் வரலாற்று சின்னங்களை உள்ளடக்கிய ரவுண்டானா, அரசின் நூலகம் ஆழ்துளைக்கிணறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

உள்நோக்கம் இருக்கா
எனவே அரசியல் உள்நோக்கம் ஏதேனும் இருக்கிறதா அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரேனும் மர்ம நபர்கள் செய்து இருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினரும் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவத்தினால் அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications