திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
மதுரை: திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, பெரியவீதி பள்ளிவாசல் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மோப்பநாய்கள் 3 இடங்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான வீடாக உள்ளது. இந்த திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் தர்கா உள்ளது.

சமீபத்தில் திருப்பரங்குன்றம் என்பது முருகனின் மலையா? சிக்கந்தர் மலையா? என்ற கிளம்பியது. அதன்பிறகு இந்த சர்ச்சை அடங்கியது.
அதன்பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார்.
ஆனால் பிரச்சனைகள் வரும் என்பதால் போலீசார் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிற்பகல் 3 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதில் மதுரை கலெக்டர்அலுவலகம், மதுரை பெரியவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவற்றுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் 3 இடத்துக்கு விரைந்தனர். மோப்பநாயும் கொண்டு செல்லப்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலகம், சிக்கந்தர் தர்கா, பெரியவீதியில் உள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு வெடிகுண்டு உள்பட எந்த மர்மபொருளும் சிக்கவில்லை. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications