சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன? மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாட்சியம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் இருவரும் கோவில்பட்டியில் தாக்கப்படவில்லை என்றும், இருவரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தான் தாக்கப்பட்டனர் என்று ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இவர்கள் இருவரையும் கொரோனா ஊரடங்கின் போது அதாவது, கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தரப்பு வாதம் வைக்கப்பட்டது. இதில், தந்தை மகன் இருவரும் கோவில்பட்டியில் தான் தாக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இந்த நிலையில், அந்த வாதத்தை மறுத்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இன்று சாட்சி அளித்தார். அவர், தந்தை, மகன் இருவரும் கோவில்பட்டியில் தாக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தான் தந்தை மகன் இருவரும் தாக்கப்பட்டனர் என்று சாட்சியம் அளித்தார்.
முன்னதாக, ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ, மற்றும் ஜெயராஜ் மனைவி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications