Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த முடியுமா? அதிகாரி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த முடியுமா? அதற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு என்பவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 கோடி கேட்டு பேரம் பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் லஞ்ச பணத்துடன் செய்தனர். காரில் தப்பிய அவரை 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

 Can DVAC of state government conduct a search in office of the central enforcement department?

பின்னர் அவருடைய கார் மற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சமாக வாங்கிய ரூ.20 லட்சம் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தார்கள். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட்திவாரிவை திண்டுக்கல் இ.பி.காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தாரக்ள்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அதிகாரி அன்கிட் திவாரி மதுரை ஜே.என்.நகரில் தங்கியிருந்த அவருடைய வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தீவிரமாக சோதனை நடத்தினார்கள். இதனால் உடனடியாக அங்கு துணை ராணுவத்தினர் வந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனிடையே அன்கிட் திவாரியின் அலுவலக அறையை மட்டும் சோதிக்க துணை ராணுவத்தினர் அனுமதித்தனர். இதனிடையே சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுலவகத்தையும் சோதிக்கப்போவதாகநேற்று இரவுவந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துணை ராணுவத்தினர் உடனடியாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை சுற்றிலும் பாதுகாப்பாக நின்றனர். மாநில போலீசாரும் அங்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த முடியுமா? அதற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, " இதுவரை மாநில அரசு அலுவலகங்களுக்கு, மத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ததில்லை. அதே போல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு, மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியதும் கடந்த காலங்களில் நடந்தது இல்லை..

ஆனால் முதல் முறையாக மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக புகுந்து இருக்கிறார்கள். சட்டப்படி அவர்கள் செல்லக்கூடாது. அப்படி செல்வதற்கும் அவர்களுக்கு அதிகாரமில்லை. ஆனால் டாக்டர் சுரேஷ்பாபு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தமிழக அரசின் ஊழியர். ஒரு மாநில அரசு ஊழியரிடம் இருந்து மத்திய அரசு ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டு பெற்றிருக்கிறார்.

லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர், மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்து, அவர்களது ஆலோசனையின் பேரில் ரூ.20 லட்சம் பணத்தை அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுத்து இருக்கிறார்கள். லஞ்சம் பெற்ற நபர், மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியாக இருப்பதால் துல்லியமான விசாரணை நடத்த அவரது அலுவலகத்தை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் முழு அளவில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. சட்டவிதிமீறலும் இல்லை. அதற்கு தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+