சிபிஐ கையில் ஆதாரம்.. அஜித் குமார் வழக்கில் அதிரடி திருப்பம்! சிக்கப் போகும் நிகிதா? பறக்கும் சம்மன்
மதுரை: சிவகங்கையில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா நீண்ட விடுமுறைக்கு பிறகு தனது பேராசிரியர் பணிக்கு திரும்பினார். இந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே பாடம் நடத்திய அவர் மீண்டும் விடுமுறையில் சென்றார். இந்நிலையில் அஜித் குமார் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள், நிகிதாவுக்கு சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மனப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தனது தாயுடன் சென்றார்.
தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் அஜித்குமாரின் சகோதரரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டர். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் தமிழக அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தியதோடு அஜித்குமாரின் சக ஊழியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது நாளாக திருபுவனம், மடப்புரம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 27 மற்றும் 28ஆம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் 27ஆம் தேதி நிகிதா அளித்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகிதா அளித்தது பொய்யான புகார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரிடம் புகார் மற்றும் காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் நிகிதா ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
27 மற்றும் 28ஆம் தேதி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு இருக்கும் நிலையில் அவற்றை டெலிட் செய்திருந்தாலும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அவற்றை சிபிஐ மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், நிகிதா புகார் அளிக்க வந்தது, காவல் நிலையம் சென்றது உள்ளிட்ட வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications