பல்லை பிடுங்கிய போது.. சிசிடிவி கேமராவை ஆப் செய்ய சொன்ன பல்வீர் சிங்.. ஹைகோர்ட் கிளையில் ஷாக் தகவல்
மதுரை: காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி கேமரா ஏஎஸ்பி பல்வீர் சிங் உத்தரவின் பேரில் ஆஃப் செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறு சிறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை பல்வீர் சிங் மற்றும் போலீஸார் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக வீடியோக்களை பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர். குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வன்கொடுமை சட்டத்தில் இடம் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
இதனிடையே பற்களை பிடுங்கும் போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் எங்கே என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அந்த காட்சிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி செயல்படவில்லை.
ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் உத்தரவின் பேரில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications